மேஷம் முதல் மீனம் வரை- இன்றைய ராசிபலன்-நல்ல நேரம்- 26- ஜூலை -2026

 

மேஷம்: தம்பதிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கி நெருக்கம் கூடும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் தரும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்: பேச்சில் நிதானம் தேவை. தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். வாகனத்தை கவனமாக இயக்கவும். பூர்வீக சொத்து வழக்கில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் போட்டிகள் கூடும். அலுவலக ரீதியாக பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

மிதுனம்: தடைபட்ட பணிகள் முழுமையடையும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். வாகனப் பழுது நீங்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் முக்கிய பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பர். வியாபார ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.

கடகம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர். அரசால் அனுகூலம் உண்டு. அலுவலகத்தில் உங்கள் நிர்வாகத் திறமை வெளிப்படும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு பழைய வாடிக்கையாளர்களை கவருவீர்.

சிம்மம்: சவாலான விஷயங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர். குடும்பத்தினர் உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பர். உறவினர், பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். அலுவலகரீதியாக பயணம் திருப்தி தரும். வியாபாரம் சூடு பிடித்து ஓரளவு நல்ல லாபம் பார்க்கலாம்.

கன்னி: குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். கையில் பணம் புரளும். முக்கிய பிரமுகர்களை சந்திப்பதால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகப் பிரச்சினை விலகும். மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.

துலாம்: பணவரவு உண்டு.சொந்த ஊர் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். தாயாரின் உடல்நலம் சீராகும். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். அரசாங்க அதிகாரிகள் நேசக்கரம் நீட்டுவர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

விருச்சிகம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பணவரவு திருப்தி தரும். எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெல்வீர்கள். சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். கூட்டுத்தொழிலில் போட்டி குறையும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

தனுசு: திடீர் பயணங்கள் அலைச்சல் தரும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. திட்டமிட்ட வேலையை முடிக்க போராடுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.

மகரம்: எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தம்பதிக்குள் இருந்த கருத்துமோதல், ஈகோ பிரச்சினை விலகும். வீட்டில் புது பொருட்கள் சேரும். பூர்வீக சொத்து வழக்கில் தீர்வு கிட்டும். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும்.

கும்பம்: குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கூடும். முன்கோபம் குறையும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவு தருவர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். மேலதிகாரி பாராட்டுவார். திடீர் திருப்பம் உண்டாகும்.

மீனம்: நீண்டநாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். பூர்வீக சொத்து வழக்கு சாதகமாகும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். அலுவலகத்தில் அடுத்தவர் பிரச்சினையில் தலையிட வேண்டாம். வியாபாரத்தில் பணியாட்கள் ஆதரிப்பர்.

பராபவ – ஆடி 10 | ஞாயிற்றுக்கிழமை

திதி: துவாதசி மதியம் 1.58 வரை. பிறகு திரயோதசி.

நட்சத்திரம்: கேட்டை காலை 7.34 வரை. பிறகு மூலம்.

நாமயோகம்: ஐந்திரம் இரவு 10.04 வரை. பிறகு வைதிருதி.

நாமகரணம்: பாலவம் மதியம் 1.58 வரை. பிறகு பவம்.

நல்லநேரம்: காலை 7-9, பகல் 11-12, மதியம் 2-3, மாலை 6-7, இரவு 9-10.

யோகம்: மந்தயோகம் காலை 7.34 வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.

சந்திராஷ்டமம்: கார்த்திகை காலை 7.34 வரை. பிறகு ரோகிணி.

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.52.

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.53.

அஸ்தமனம்: மாலை 6.37.

ராகு காலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம் 12.00-1.30

குளிகை: பிற்பகல் 3.00-4.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 3, 6

பரிகாரம்: வெல்லம்