உலக அரங்கில் நீண்டகாலமாக நிலவி வரும் பதற்ற நிலையை தணிக்கும் நடவடிக்கையாக, மோதல்களை நிறுத்திவிட்டு மீண்டும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு ஈரானும் அமெரிக்காவும் உடன்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க மற்றும் ஈரானிய உயர் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (30) கட்டாரின் தோஹா நகரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
இச்சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை மற்றும் சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையின் கடல்சார் போக்குவரத்து விவகாரங்கள் குறித்து ஆழமாக ஆராயப்படவுள்ளன.
பேச்சுவார்த்தைகளுக்கு உடன்பட்டுள்ள போதிலும், அடுத்த 30 நாட்களுக்கு ஹோர்முஸ் நீரிணையின் முழுக் கட்டுப்பாடும் ஈரானின் வசமே இருக்கும் என ஈரான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பானது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார பதற்றங்களைக் குறைப்பதில் முக்கிய மைல்கல்லாக அமையும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.



