ருமேனியாவில் சைபர் அட்டாக் – பேனா, பேப்பர் முறைக்கு மாறிய மருத்துவமனை நிர்வாகங்கள்

 

ரோமேனியாவில் உள்ள சுமார் 100 மருத்துவமனைகள் பழைய முறைப்படி பேனா மற்றும் காகிதத்தைப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றன. இதற்கு காரணம் அங்கு நடந்த ஒரு மிகப்பெரிய சைபர் தாக்குதல் (Cyberattack) ஆகும்.

அந்நாட்டில் BackMyData’ என்ற ஆபத்தான வைரஸ் மூலம் மருத்துவமனைகளின் கணினி அமைப்புகள் முடக்கப்பட்டன. நோயாளிகளின் விவரங்கள், மெடிக்கல் ஹிஸ்ட்ரி மற்றும் பரிசோதனை முடிவுகள் அனைத்தும் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. தரவுகளை மீண்டும் கொடுக்க பதிலாக பணம் (Bitcoin) கேட்கப்பட்டது. ஹேக்கர்களால் ‘Hippocrates’ என்ற முதன்மை மருத்துவ மென்பொருள் முற்றிலும் செயலிழந்தது.

இதனால் ரோமேனியாவில் நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் பாதுகாப்பு கருதி தங்களது கணினிகளை அணைத்து வைத்து விட்டன. மேலும் அந்த மருத்துவமனைகள் பேனா மற்றும் காகிதத்தைப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றன. கணினிகளை பயன்படுத்தாதன் காரணமாக ஆன்லைன் மூலம் மருந்துச் சீட்டு (Prescription) எழுதவோ, லேப் ரிப்போர்ட்டுகளைப் பார்க்கவோ முடியவில்லை. இதனால் அவசரச் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் விவரங்களை மருத்துவர்கள் காகிதத்தில் எழுதிப் பதிய தொடங்கினர். ரத்தப் பரிசோதனை போன்ற முடிவுகள் காகிதத்தில் கையால் எழுதப்பட்டு மருத்துவர்களிடம் வழங்கப்பட்டன.