மேஷம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர். பெரிய மனிதர்கள், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் குழப்பம் விலகும். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.
ரிஷபம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். வீட்டில் நிம்மதி பிறக்கும். அரசு காரியங்களில் வெற்றியுண்டு. பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவும் பாராட்டும் கிடைக்கும்.
மிதுனம்: பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் இழுபறி யாக இருந்த பழைய பாக்கி வசூலாகும். அலுவலக மேலதிகாரியின் விட்டு விசேஷங்களில் பங்கேற்கும் அளவுக்கு நெருக்கமாவீர்.
கடகம்: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். குழப்பங்கள் நீங்கி குடும்பத்தில் ஓரளவு நிம்மதியுண்டு. வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். உத்தியோகம் சிறக்கும்.
சிம்மம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. பழைய வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் அலைச்சல் உண்டு. அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
கன்னி: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராக பேசி காரியம் சாதிப்பீர். சேமிக்கும் அளவுக்கு வருவாய் கூடும். பழுதான சாதனங்களை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மகிழ்ச்சியுண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனைகளை நிராகரிக்காதீர்.
துலாம்: சொந்த பந்தங்களிடையே மதிப்பு, மரியாதை கூடும். தந்தைவழி சொத்துகள் கைக்கு வரக்கூடும். உடன் பிறந்தவர்கள் உதவி செய்வர். வாகனப் பழுது நீங்கும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகவும். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்.
விருச்சிகம்: குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிட்டும். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் உடல்நிலை சீராக இருக்கும். வியாபாரத்தில் வராது என்றிருந்த கடன், தானாக வந்து சேரும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
தனுசு: புதியவர்கள் அறிமுகமாவர். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். பூர்வீக சொத்து வழக்குகள் சாதகமாக முடியும். அலுவலகத்தில் குழப்பங்கள் நீங்கி நிம்மதி உண்டு. வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர்.
மகரம்: வீட்டில் உங்கள் ஆலோசனைகள் ஏற்கப்படும். பணப் பற்றாக்குறை, மனக்குழப்பம் வந்து போகும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். முன்கோபத்தை குறைக்கவும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்ப்பீர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
கும்பம்: மனக்குழப்பம் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் போக்கில் மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.
மீனம்: குடும்பத்தில் அமைதி பிறக்கும். எதிர்பார்த்து காத்திருந்த தொகை வந்து சேரும். பூர்வீக சொத்து வழக்கில் நல்ல தீர்வு கிட்டும். உங்கள் ஆலோசனைகள் ஏற்றுக் கொள்ளப்படும். வியாபாரத்தில் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர். அலுவலகத்தில் அமைதி காப்பீர்.
திதி: பஞ்சமி மாலை 5 மணி வரை. பிறகு சஷ்டி.
நட்சத்திரம்: ஆயில்யம் காலை 10.06 வரை. பிறகு மகம்.
நாமயோகம்: ஹர்ஷணம் மதியம் 2.52 வரை. பிறகு வஜ்ரம்.
நாமகரணம்: பாலவம் மாலை 5 மணி வரை. பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: மந்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
சந்திராஷ்டமம்: உத்திராடம் காலை 10.06 வரை. பிறகு திருவோணம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.43.
அஸ்தமனம்: மாலை 6.37.
ராகு காலம்: காலை 10.30-12.00
எமகண்டம்: மதியம் 3.00-4.30
குளிகை: காலை 7.30-9.00
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 3, 9
பரிகாரம்: வெல்லம்
தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை




