மட்டன் பொடிமாஸ்

 

தேவையான பொருட்கள்

வேக வைப்பதற்கு:

* எலும்பில்லாத மட்டன் – 400 கிராம்

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* உப்பு – சிறிது

* நெய் -1 டீஸ்பூன்

* பூண்டு – 2 பல் (தட்டியது)

* இஞ்சி – 1/4 இன்ச் (துருவியது)

* தண்ணீர் – சிறிது

பொடிமாஸ் செய்வதற்கு:

* எண்ணெய் – 2 டீஸ்பூன்

* நெய் – 1 டீஸ்பூன்

* கடுகு – 1/4 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 3/4 டீஸ்பூன்

* சீரகம் – 2 சிட்டிகை

* மிளகு – 1/2 டீஸ்பூன்

* சோம்பு – 2 சிட்டிகை

* முந்திரி – 10 (உடைத்தது)

* இஞ்சி – 1/2 இன்ச் (துருவியது)

* பூண்டு – 6 பல் (தட்டியது)

* கறிவேப்பிலை – 1 கொத்து

* பச்சை மிளகாய் – 4(பொடியாக நறுக்கியது)

* சின்ன வெங்காயம் – 2 கைப்பிடி (நறுக்கியது)

* மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

* உப்பு – சிறிது

* மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்

* வேக வைத்த மட்டன்

* துருவிய தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்

* கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

* முதலில் மட்டனை கழுவி மிக்சர் ஜாரில் போட்டு ஒருமுறை லேசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு குக்கரில் அரைத்த மட்டனை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து கிளறி, கிறிது நீரை ஊற்றி குக்கரை மூடி 2-3 விசில் விட்டு இறக்க வேண்டும்.

* விசில் போனதும் குக்கரைத் திறந்து கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், மிளகு, சோம்பு, முந்திரி ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.

* பிறகு அதில் தட்டி வைத்துள்ள பூண்டு மற்றும் துருவிய இஞ்சியை சேர்த்து நன்கு கிளறி, கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாயை தூவி நன்கு வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், சிறிது உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* அதன் பின் அதில் வேக வைத்த மட்டனை சேர்த்து நன்கு வதக்கி, மூடி வைத்து 1 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* இறுதியாக அதில் துருவிய தேங்காயை சேர்த்து 2 நிமிடம் கிளறி, கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான மதுரை மட்டன் பொடிமாஸ் தயார்