
நாசா (NASA) விண்வெளி ஆய்வு நிறுவனம் 2022-ஆம் ஆண்டு செப்டம்பரில் DART விண்கலத்தை மணிக்கு சுமார் 22,500 கி.மீ வேகத்தில் டைமார்போஸ் என்ற சிறுகோளின் மீது மோதச் செய்தது. இப்போது ஐரோப்பிய விண்வெளி முகமையின் ஹீரா விண்கலம் அனுப்பிய புதிய படங்கள் மூலம் அந்த மோதலின் விளைவுகள் வெளியாகியுள்ளன.
சுமார் 151 மீட்டர் அகலம் கொண்ட டைமார்போஸ் சிறுகோளில், ஒரு விளையாட்டு மைதானம் அளவிற்குப் பிரம்மாண்ட பள்ளம் ஏற்பட்டுள்ளது. டைடிமோஸ் என்ற பெரிய சிறுகோளைச் சுற்றி வரும் டைமார்போஸின் சுற்றுப்பாதை நேரம் சுமார் 33 நிமிடங்கள் குறைந்துள்ளது. மேலும், முன்பு ஒரே முகத்தைக் காட்டிக்கொண்டு சுற்றி வந்த இந்தச் சிறுகோள், இப்போது விண்வெளியில் தடுமாறிச் சுழல்கிறது.
மோதலால் கால்பந்து முதல் வாஷிங் மெஷின் அளவு வரையிலான நூற்றுக்கணக்கான கற்கள் சிதறியுள்ளதும், பள்ளத்தின் நடுவில் நீளமான அமைப்பு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. 2024 அக்டோபரில் ஏவப்பட்ட ஹீரா விண்கலம் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது; 2 சிறிய செயற்கைக்கோள்களை டைமார்போஸில் தரையிறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பூமியை நோக்கி வரும் ஆபத்தான விண்கற்களின் பாதையை மோதல் மூலம் மாற்றிப் பாதுகாக்கும் தொழில்நுட்பத்தை உறுதிப்படுத்த இந்த ஆய்வு உதவுகிறது



