
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள உட்கியாக்விக் (Utqiaġvik – முன்னர் Barrow என அழைக்கப்பட்டது. நகரில், ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் சுமார் 65 நாட்களுக்குச் சூரியன் உதிக்காமல் இருக்கும். கால அளவு,2026 நவம்பர் 18-ஆம் தேதி பிற்பகல் 1:42 மணியளவில் அந்த ஆண்டின் கடைசி சூரிய அஸ்தமனம் நிகழ்ந்தது. இதையடுத்து, சுமார் 65 நாட்களுக்குப் பிறகு 2027 ஜனவரி 23-ஆம் தேதி பிற்பகல் 1:03 மணியளவிலேயே அங்கு மீண்டும் சூரியன் உதிக்கும்.
துருவ இரவு இந்த இயற்கை நிகழ்வு ‘துருவ இரவு’ என்று அழைக்கப்படுகிறது. பூமி தனது அச்சில் சுமார் 23.5 டிகிரி சாய்ந்திருப்பதே இதற்குக் காரணமாகும். ஆர்க்டிக் வட்டத்திற்கு வடக்கே அமைந்துள்ள இந்தப் பகுதி, குளிர்காலத்தில் சூரியனிடமிருந்து விலகிச் சாய்ந்திருப்பதால் சூரியக் கதிர்கள் அடிவானத்திற்கு மேலே வருவதில்லை.
முழு இருளாக இருக்குமா?: 65 நாட்களும் 24 மணி நேரமும் முழுமையான கும்மிருட்டாக இருக்காது. சூரியன் அடிவானத்திற்குச் சற்று கீழே இருப்பதால், மதிய வேளைகளில் சில மணி நேரத்திற்கு மங்கலான நீல நிற அந்தி வெளிச்சம் காணப்படும்.
நீதிபதிகள் நியமனம்: மத்திய அரசு – உச்சநீதிமன்றம் இடையே நீடிக்கும் மோதல்!’
கோடைக்கால அதிசயம், குளிர்காலத்தில் 65 நாட்கள் இருள் சூழ்ந்திருப்பதைப் போலவே, கோடைக்காலத்தில் மே முதல் ஆகஸ்ட் வரை சுமார் 80 முதல் 85 நாட்களுக்கு இங்குச் சூரியன் மறையாமலேயே (Midnight Sun) தொடர்ந்து பகலாக இருக்கும்.



