
மேஷ ராசி அன்பர்களே! உங்கள் விருப்பம் நிறைவேறும் நாளாக இன்று அமையும். வியாபார துறையில் ஆதாயங்கள் அதிகரிக்கும். தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். நவீன வசதிகளுடன் கூடிய வீட்டில் வசிக்கும் நிலை ஏற்படும். மேற்கு திசையிலிருந்து உங்களுக்கு நல்ல செய்தி வரும். குலதெய்வத்தினுடைய அனுக்கிரகத்தால் குடும்பத்தில் இருந்த துயரங்கள் நீங்கும். பொருள் வரவு அதிகரிக்கும். குரு அருளால் ஆபரணச் சேர்க்கை உண்டாகும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வருமானம் கூடும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அரசு பதவி அடைவார்கள். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முயற்சியில் வெற்றி பெறுவர் இன்று உங்கள் பலம்: தூர தேச நாட்டில் உள்ள உறவினரிடமிருந்து நல்ல தகவல் வரும். வேலையில் உங்களுடைய நிலையை உறுதி செய்வீர்கள். இன்று உங்கள் பலவீனம்: நம்பியவரிடமிருந்து சில நேரங்களில் எதிர்பாராத தகவல் வரும். உங்களை குறை சொல்லி திரிபவர்களை கூட வெறுக்க மாட்டீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1. வேலை இடத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். 2. வியாபாரம் செய்யும் இடத்தில் நிதானமாக பேச வேண்டும். 3. வயது வந்த பிள்ளைகளின் போக்கை கண்காணிக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல் வழிபட வேண்டிய தெய்வம் : முருகன்
ரிஷப ராசி அன்பர்களே! இன்று நல்ல காரியங்களை சந்திக்க போகிறீர்கள். அரசு அதிகாரிகளால் அனுகூலங்கள் அதிகரிக்கும். குடும்ப சுகமும் மகிழ்ச்சியும் நிம்மதியை தரும். தன தானிய லாபங்கள் உங்களுக்கு வந்து சேரும். ஆடை ஆபரண சேர்க்கைகளும் உண்டாகும். குடும்பத்தில் ஒரு நூதனமான ஆடம்பரப் பொருள் வந்து சேரும். மனைவி மக்கள் உங்களோடு குதூகலமாக இருப்பார்கள். வடக்கு திசையில் இருந்து நல்ல செய்தி வரும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அருமை அடைவார்கள் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வம் பெறுவார்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நற்பலன் அடைவார்கள். இன்று உங்கள் பலம்: வியாபாரத்தில் இருக்கிற குறைகளை கண்டறிந்து நிவர்த்தி செய்வீர்கள். தொழில்துறைகளில் ஏற்படும் போட்டியை சமாளிப்பீர்கள். இன்று உங்கள் பலவீனம்: காரியம் சாதிப்பதற்காக இரண்டு மடங்கு செலவு செய்வீர்கள். புகழ்ச்சிக்கு சீக்கிரம் மயங்கி விடுவீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 2 அரசாங்க வேலையில் அவசரப்பட்டு முடிவுக்கு வர வேண்டாம். 3 மனைவியின் ஆசை என்ன என்பதை தெரிந்து செயல்பட வேண்டும். அதிர்ஷ்ட எண்கள்: 2,9 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு வணங்க வேண்டிய தெய்வம்: விநாயகர் பெருமான்.
மிதுன ராசி அன்பர்களே! இன்பமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள் இன்று. வியாபாரத்தில் வெற்றி கிட்டும்.மங்கல செயல்கள் செய்வதற்கு வாய்ப்புகளும் வசதிகளும் ஏற்படும். புண்ணிய தீர்த்த யாத்திரை செல்வதற்கு வாய்ப்பு உண்டாகும். தொழிலில் மிகுந்த ஏற்றத்தை பெறுவீர்கள். உறவினர்கள் மத்தியில் புகழ் அதிகரிக்கும். அரசு வட்டாரத்தில் செல்வாக்கு கூடும். குலதெய்வத்தின் அருளால் வந்த தீங்கு மாறும். மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெற்றி அடைவார்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காரிய சித்தி பெறுவார்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: கேட்ட இடத்தில் எல்லாம் தட்டாமல் உதவிகள் வந்து சேரும். வெளிநாட்டில் இருந்து உறவினரின் அன்பு பக்கபலமாக திகழும். இன்று உங்கள் பலவீனம்: வெளியிடங்களில் உணர்ச்சி வசப்பட்டு பேசி விடுவீர்கள். உடனே காரியம் நடக்கவில்லையே என்று கோபப்படுவீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 பணம் காசுகளை கையாளுவதில் கவனம் தேவை. 2 கடையில் வேலை செய்பவர்களையும் கண்காணிக்க வேண்டும். 3 வெளியூர் பயணங்களின் போது பணம் பாதுகாப்பு மிகவும் முக்கியம். அதிர்ஷ்ட எண்: 5 9 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, . வணங்க வேண்டிய தெய்வம்: சமயபுரம் மாரியம்மன்.
கடக ராசி அன்பர்களே! இன்பமும் துன்பமும் கலந்த நாள் இது. வியாபாரத்தில் மந்தமாக இருந்தாலும் வருமானத்தில் குறைவு இருக்காது. எதிர்பார்த்த காரியங்களில் சிறு ஏமாற்றம் ஏற்படும். தெற்கிலிருந்து வந்த செய்தியால் மனச்சங்கடம் உண்டாகும். வம்பு வழக்குகள் கூட வீடு தேடி வரலாம். வடக்கு திசையிலிருந்து அனுகூலமான தகவல்கள் கிடைக்கும். சூதாட்ட பந்தயங்களில் ஈடுபட வேண்டாம். ஆன்லைன் வர்த்தகங்களில் அதிக ஈடுபாடு காட்ட வேண்டாம். புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாமதமாக வெற்றி பெறுவார்கள். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுமாரான லாபம் அடைவார்கள் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலை சுமையில் சிரமப்படுவார்கள். இன்று உங்கள் பலம்: வேலை இடத்தில் என்ன பிரச்சனை வந்தாலும் அதை துணிவோடு எதிர்கொள்வீர்கள். அடுத்து என்ன வருகிறது என்பதை முன்கூட்டியே கணிப்பீர்கள். இன்று உங்கள் பலவீனம்: உங்களுக்குப் பிடிக்காவிட்டாலும் நண்பர்களின் பிரியத்திற்காக சில காரியங்கள் செய்வீர்கள். நம்பியவர்கள் உதவி தாமதமாகும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையாக பழக வேண்டும். 2 பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். 3 மின்சாரப் பொருட்களை பாதுகாப்பாக கையாள வேண்டும். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: சோமசுந்தரம் பெருமான்
சிம்ம ராசி அன்பர்களே! மகிழ்ச்சியும் குதூகலமும் நிறைந்த நாள். நினைத்த காரியத்தில் நீங்கள் வெற்றி பெறுவது மட்டுமல்லாமல் புகழும் அடைவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நற்பயன்கள் உண்டாகும். ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். மனைவி ஆசைப்பட்டதை வாங்கி கொடுப்பீர்கள் வாழ்க்கை வசதிகள் பெருகும். பெண்களினால் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. குடும்பத்தில் கலகலப்பு கூடும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வம் பெறுவார்கள். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நினைத்ததை சாதிப்பார்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொழில் மேன்மை அடைவார்கள். இன்று உங்கள் பலம்: அரசாங்க அலுவலகங்களில் உங்கள் பேச்சுக்கு மரியாதை உண்டு. அரசியல்வாதி நண்பரின் உதவி பலமாக அமையும். இன்று உங்கள் பலவீனம்: கவனமாக பேசினாலும் சில நேரங்களில் வார்த்தை தடுமாறி விடுவீர்கள். சில நேரங்களில் வேலையில் கவனம் சிதறும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 பணம் கொடுக்கும் போது எழுதி வாங்கிக் கொள்ள மறக்க வேண்டாம். 2 நிலம் வாங்கும் போது சட்ட சிக்கலை பார்க்க வேண்டும். 3 அரசு வேலையில் சோம்பேறித்தனம் இல்லாமல் இருக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 1,6 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: யோக நரசிம்மர்.
கன்னி ராசி அன்பர்களே! நல்ல விஷயங்கள் நடக்கும் நாள். வித்தைகளில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். கல்வியில் மிகுந்த முன்னேற்றம் கிடைக்கும். கலைகளில் அதிக ஆர்வம் ஏற்படும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கூடும். வட திசையில் இருந்து லாபமான செய்தி வந்து சேரும். பெரியோர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் நெளிவு சுழிவோடு நடந்து லாபம் அதிகரிக்கும். தேக ஆரோக்கியம் கூடும். பகைவர்கள் தொல்லை நீங்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நன்மை அடைவார்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனபலம் அதிகரிக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கையிருப்பு அதிகரிப்பார்கள். இன்று உங்கள் பலம்: நீங்கள் செல்லுகின்ற இடமெல்லாம் உங்களுடைய மரியாதை அதிகரிக்கும். உங்களுடைய பேச்சை உறவுகளும் நண்பர்களும் மதிப்பார்கள். இன்று உங்கள் பலவீனம்: கூடப்பிறந்தவரே சில நேரங்களில் உங்களுக்கு எதிராக நடப்பார். முக்கியமான காரியத்தில் சில தடங்கல்கள் வரும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 கூட்டுத் தொழிலில் சற்று கவனமாக இருக்க வேண்டும். 2 பணம் காசு விஷயத்தில் உறவு முறைகளை பார்க்க வேண்டாம். 3 மனைவியின் பேச்சை அக்கறையோடு கேட்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 1,9 அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி.
துலாம் ராசி அன்பர்களே! பிரச்சனைகள் தீரும் நாள் இன்று. வியாபாரத்தில் மிக நன்மையான பலன்களே காணப்படும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் கூடும். வீடு மனை ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்படும். விவசாயத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நிலங்கள் வாங்கும் யோகம் அமையும். தன தானிய லாபம் உண்டாகும். வாகனப் பிராப்தியும் ஏற்படும். கிழக்கு திசையில் இருந்து உங்களுக்கு ஒரு நல்ல தகவல் வரும். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு வியாபாரம் வெற்றியாகும். சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு நல்ல காரியங்கள் நடக்கும். விசாகம் நட்சத்திரக்காரர்கள் செல்வாக்கு அதிகரிக்கும். இன்று உங்கள் பலம்: குலதெய்வத்தின் அருளால் மனத்தெம்பு அதிகரிக்கும். நீண்ட நாள் வராமல் இருந்த கடன் வந்து சேரும். இன்று உங்கள் பலவீனம்: காரிய வெற்றி அடைந்தாலும் ஏதோ ஒரு மனக்குறை உங்களை படுத்தும். கொடுத்த வாக்கை நிறைவேற்றாத நிலை உண்டாகும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வாகனங்களை எச்சரிக்கையாக ஓட்ட வேண்டும். 2 வியாபார விஷயங்களின் ரகசியங்களை வெளியே கசிய கூடாது. 3 அரசாங்க வேலையில் கவனமாக இருக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 6,3 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: பெருமாள்.
விருச்சிக ராசி அன்பர்களே! எந்த காரியத்திலும் நன்மையே நடக்கும் நாள். வியாபாரத்தில் கொழுத்த லாபம் கிடைக்கும். தொழில் துறையில் ஏற்பட்ட எதிர்ப்புகள் தவிடு பொடியாகும். திருமண யோகம் சிலருக்கு கைகூடும். அரசு சலுகைகள் கிடைக்கும். அரசு உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். உயர்ந்த இடத்தில் இருப்பவர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். தன தானிய லாபங்கள் உண்டாகும். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு உயர்வு உண்டாகும். அனுஷம் நட்சத்திரக்காரர்கள் அனுகூலம் அடைவார்கள். கேட்டை நட்சத்திரக்காரர்கள் பொருள் வரவு பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: வெளியூரிலிருந்து வரும் நல்ல செய்தியால் மன மகிழ்ச்சி ஏற்படும். உயர்ந்த இடத்து சிபாரிசு உங்களுக்கு உதவி செய்யும். இன்று உங்கள் பலவீனம்: நல்லதே நினைத்தாலும் உறவினர்கள் உங்களை பாதகமாக நினைப்பார்கள். சில நேரங்களில் நிதானம் தவறுவீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 பணம் காசு விவகாரத்தில் தாட்சண்யம் பார்க்கக் கூடாது. 2 மனைவியின் விருப்பத்திற்கு மாறாக நடக்கக் கூடாது. 3 பிள்ளைகளின் படிப்பு குறித்து கண்காணிக்க வேண்டும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: குன்றக்குடி முருகன். அதிர்ஷ்ட எண்: 8,5
தனுசு ராசிக்கார அன்பர்களே! உங்கள் புத்திசாலித்தனத்தால் வியாபாரம் பெருகும். நல்ல லாபம் கிடைக்கும். வெளியூர் பயணங்களில் நீங்கள் நினைத்தது நிறைவேறும். தொழிலில் ஏற்பட்ட போட்டிகள் மறைந்து மன நிம்மதி கிடைக்கும். உறவினர்களின் உதவி தக்க சமயத்தில் உங்களுக்கு வந்து சேரும். நண்பர்களால் நன்மை உண்டாகும். தொட்ட காரியத்தில் தடங்கல் இல்லாமல் வெற்றி பெறும் நிலை உருவாகும். அரசாங்க உதவிகள் தாராளமாக வந்து சேரும். மூல நட்சத்திரக்காரர்களுக்கு நல்லது நடக்கும். பூராட நட்சத்திரக்காரர்கள் வெற்றி பெறுவார். உத்திரம் நட்சத்திரக்காரர்கள் பெருமை அடைவார்கள். இன்று உங்கள் பலம்: எல்லா வகையிலும் உங்களுக்கு ஒருவர் உதவியாக இருப்பார். கேட்ட இடத்தில் தாராளமாக பண உதவி கிடைக்கும். இன்று உங்கள் பலவீனம்: திட்டமிட்டு காரியம் செய்ய முடியாத நிலை ஏற்படும். சில நேரங்களில் ஒரு முறைக்கு இருமுறை அலைய வேண்டும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வெளியிடத்தில் அனாவசியமாக வாக்குவாதம் செய்வதை தவிர்க்க வேண்டும். 2 தொழில்துறைகளில் உள்ள சிரமத்தை கண்காணிக்க வேண்டும். 3 உடல் ஆரோக்கியத்தில் அக்கறையாக இருக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 3,6 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், கரு நீலம். வணங்க வேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி.
மகர ராசி அன்பர்களே! இன்று அதிக நன்மைகள் உண்டாகும். அதிகாரிகளால் அனுகூலம் ஏற்படும். கலைத்துறையில் மதிப்பு மரியாதையும் கூடும். வியாபாரத்தில் வெற்றி அதிகரிக்கும். வருமானம் பெருகி கையிருப்பு உயரும். அரசியலில் செல்வாக்கு உண்டாகும். வடக்கு திசையில் இருந்து வரும் செய்தியால் மனம் மகிழ்ச்சி அடையும். பயிர் தொழிலில் ஆதாயம் கிடைக்கும். உத்தியோக உயர்வுகள் உண்டாகும். விளைநிலம் வாங்கும் யோகம் கிட்டும். உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் உயர்வு பெறுவார்கள். திருவோணம் நட்சத்திரக்காரர்கள் நினைத்ததை முடிப்பார்கள். அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் வருமானத்தை அதிகரிப்பார்கள். இன்று உங்கள் பலம்: எடுத்த காரியத்தை முடிக்கின்ற மன பலம் அதிகரிக்கும். நண்பர்களின் ஒத்தாசை உதவியாக இருக்கும். இன்று உங்கள் பலவீனம்: அவசியமில்லாத செலவுகள் வந்து தொந்தரவு செய்யும். மனைவிக்கு சிறு உடல் கோளாறு ஏற்படும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வியாபாரத்தில் சின்ன விஷயத்தில் கூட அலட்சியம் கூடாது. 2 வேலை அதிகம் இருந்தாலும் பிள்ளைகளிடம் நெருக்கமாக இருக்க வேண்டும். 3 பக்கத்து வீட்டு விவகாரத்தில் தலையிடக்கூடாது. அதிர்ஷ்ட எண்: 9,2 அதிர்ஷ்ட நிறம்: நீலம் சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: திருநள்ளாறு சனி பகவான்.
கும்ப ராசி அன்பர்களே! நீங்கள் ஆசைப்பட்டது நடக்கும். நீண்ட நாள் முடியாமல் இருந்த ஒரு காரியம் முடிவுக்கு வரும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரித்து வருமானம் பெருகும். தொழில் துறையில் இருந்த போட்டிகள் அகலும். நல்ல மனிதரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். மேற்கு திசையிலிருந்து அனுகூலமான செய்தி வரும். பதவி உயர்வு கிடைக்கும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு செல்வம் பெருகும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு ஆபரண யோகம் உண்டாகும். இன்று உங்கள் பலம்: அரசாங்க உதவிகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். உங்கள் குணம் அறிந்து நண்பர்கள் உதவ தயாராக இருப்பார்கள். இன்று உங்கள் பலவீனம்: வெளியூர் பயணத் திட்டத்தில் மாறுதல் ஏற்படும். கொடுத்த காசை கேட்க மனம் சங்கடப்படுவீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 கடன் கொடுத்து வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. 2 தேவையில்லாத வம்பு வழக்குகளில் ஈடுபடுவது நல்லதல்ல. 3 எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்க மறக்க கூடாது. அதிர்ஷ்ட எண்: 8,3 அதிர்ஷ்ட நிறம்: கருப்பு, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: குச்சனூர் சனி பகவான்.
மீன ராசி அன்பர்களே! ஆதாயம் அதிகரிக்கும் நாள் இன்று. தொழில் துறையில் மிகுந்த பலனை அடைவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிட்டும். புதிய உற்சாகம் மனதில் ஊற்றெடுக்கும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். அரசு சலுகைகள் கிடைக்கும். ஆழ்ந்த நித்திரையோகம் உண்டாகும். ஆகாயம் அதிகரித்து பண இருப்பு கூடும். பெண்களால் நன்மை உண்டாகும். அரசியல் செல்வாக்கு அதிகரிக்கும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு நல்ல செய்தி வரும். உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் பண வியாபாரம் பெருகும். ரேவதி நட்சத்திரக்காரர்கள் அனுகூலம் அதிகரிக்கும். இன்று உங்கள் பலம்: உடல் உறுதியும் மனத் தைரியமும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். தேவைகளுக்கு ஏற்ப உதவி கிடைக்கும். இன்று உங்கள் பலவீனம்: மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசுவதில் சிக்கல் வரும். வேலை அலைச்சலால் உடல் அசதி பாடாய்படுத்தும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வெளியே செல்லும்போது தேவையானதை எடுத்துக் கொள்ள வேண்டும் 2 பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். 3 அடுத்தவருக்கு வரும் ஆசை வார்த்தைகளை அதிகம் நம்ப வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: மதுரை மீனாட்சி அம்மன்.
இன்றைய பஞ்சாங்கம் தேதி 5 – கார்த்திகை – பராபவ வருடம் சனி நாள் சனி திதி ஏகாதசி (up to 6:32 am) துவாதசி (up to November 22, 4:57 am) திரயோதசி (up to November 23, 2:37 am) நட்சத்திரம் உத்திரட்டாதி (up to 6:50 am) ரேவதி (up to November 22,5:54 am) அஸ்வினி (up to November 23,4:15 am) யோகம் மரண-சித்த யோகம் நல்ல நேரம் 7:45 – 8:45 am / 12:15 – 1:15 pm கௌரி நல்ல நேரம் 10:45 – 11:45 am / 9:30 – 10:30 pm இராகு காலம் காலை 9.00 – 10.30 எமகண்டம் மதியம் 1.30 – 3.00 குளிகை காலை 6.00 – 7.30 சூலம் கிழக்கு பரிகாரம் தயிர் சந்திராஷ்டமம் உத்திரம் சூரியோதயம் 6:14 AM சூரிய அஸ்தமனம் 5:35 PM சந்திரோதயம் Nov 21 2:49 PM சந்திர அஸ்தமனம் Nov 22 3:35 AM



