தாய்லாந்தின் சுற்றுலாத் தீவான பூக்கெட்டில் 11 பேர் உயிரிழப்பு

தாய்லாந்தின் தெற்குப் பகுதியிலுள்ள சுற்றுலாத் தீவான பூக்கெட்டில், இன்று அதிகாலையில் வணிக வளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்; மேலும் 16 பேர் காயமடைந்தாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். வாகன வாடகை நிறுவனம் இயங்கி வந்த கட்டிடத்தில் தொடங்கிய தீ, பின்னர் அருகிலிருந்த பல கட்டிடங்களுக்கும் பரவியது.

இந்தத் தீ விபத்து அதிகாலை 3:17 மணியளவில் ஏற்பட்டதாகவும், தீயணைப்பு வீரர்கள் சுமார் இரண்டு மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் 15 பேர் தாய்லாந்து நாட்டவர்கள், ஒருவர் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் உயிரிழந்தவர்களோ அல்லது காயமடைந்தவர்களோ சுற்றுலாப் பயணிகள் அல்ல என்று காவல்துறையினர் தெரிவித்தனர்