
945 கருப்பு வைரங்கள்; 123 மாணிக்கங்கள்: 10 சொகுசு பங்களா வாங்கும் பணத்தில் ஒரே ஒரு பேனா; விலையை கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க
இந்த ஒரு பேனாவை வாங்கும் பணத்தில் 10 சொகுசு பங்களாக்களை வாங்கலாம். வாழ்நாள் முழுவதும் எந்த வேலையும் செய்யாமல் நிம்மதியாக உட்கார்ந்து சாப்பிடலாம்.
பொதுவாக நாம் பயன்படுத்தும் பேனாக்களின் விலை ரூ.10 முதல் ரூ.100 வரை இருக்கும். பிராண்டட் பேனாக்கள் ஆயிரங்களிலும், சொகுசு பேனாக்கள் லட்சங்களிலும் விற்பனையாகும்.
ஆனால், ஒரே ஒரு பேனாவின் விலை ரூ.67 கோடி என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், இது உண்மைதான்! இந்த ஒரு பேனாவை வாங்கும் பணத்தில் 10 சொகுசு பங்களாக்களை வாங்கலாம்.
வாழ்நாள் முழுவதும் எந்த வேலையும் செய்யாமல் நிம்மதியாக உட்கார்ந்து சாப்பிடலாம். உலகின் மிக விலையுயர்ந்த பேனாவாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ள ‘ஃபுல்கோர் நாக்டர்னஸ்’ (Fulgor Nocturnus) பேனாவின் பின்னணி குறித்து பார்க்கலாம்.
உலகிலேயே ஒரே ஒரு பேனா மட்டுமே
இத்தாலியைச் சேர்ந்த புகழ்பெற்ற சொகுசு பேனா தயாரிப்பு நிறுவனமான ‘திபால்டி’ (Tibaldi) இந்த அற்புதமான ஃபவுண்டன் பேனாவை உருவாக்கியுள்ளது. வழக்கமான விற்பனைக்காக இல்லாமல், ஒரு தனித்துவமான கலைப் படைப்பாக இது உருவாக்கப்பட்டது. எனவே, உலகிலேயே இதுபோன்ற பேனா ஒன்றே ஒன்றுதான் உள்ளது. இதற்கு இணையான இன்னொரு பேனா கிடையாது.
ரூ.67 கோடி விலைக்கு பின்னால் உள்ள ரகசியம் என்ன?
இந்த பேனாவில் வைரங்கள் பதிக்கப்பட்டிருப்பது மட்டுமே இதன் அதிகப்படியான விலைக்கு காரணமல்ல. இதற்கு பின்னால் மிக நுணுக்கமான பொறியியல் மற்றும் கணிதக் கோட்பாடுகளும் அடங்கியுள்ளன. லியோனார்டோ டாவின்சி போன்ற மாபெரும் ஓவியர்கள் தங்கள் ஓவியங்களில் பயன்படுத்திய ‘ஃபை’ (Phi – 1.618) என்ற கணித விகிதத்தைப் பயன்படுத்தி இது வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, பேனாவின் மூடியின் நீளத்திற்கும், பேனாவின் மீதமுள்ள பகுதியின் நீளத்திற்கும் இடையிலான விகிதம் துல்லியமாக 1.618 ஆக இருக்கும்.
அபூர்வ கற்கள்
இந்த பேனாவில் 945 அரிய கருப்பு வைரங்களும், 123 மாணிக்கக் கற்களும் பதிக்கப்பட்டுள்ளன. லத்தீன் மொழியில் ‘ஃபுல்கோர் நாக்டர்னஸ்’ என்றால் “இரவு ஒளி” என்று பொருள். அதற்கேற்ப இந்த பேனா இரவிலும் ஒளிரும் தன்மை கொண்டது.
இந்த பேனாவில் 18-காரட் தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், எழுதும்போது மிக மென்மையாக இருப்பதற்காக இதன் மீது ருத்தேனியம் (Ruthenium) பூச்சு பூசப்பட்டுள்ளது.
ரூ.67 கோடிக்கு ஏலத்தில் வாங்கிய மர்ம நபர்
2010-ஆம் ஆண்டு சீனாவின் ஷாங்காய் (Shanghai) நகரில் நடைபெற்ற ஒரு சிறப்பு தொண்டு ஏலத்தில் இந்தப் பேனா காட்சிக்கு வைக்கப்பட்டது. உலகின் பெரும் பணக்காரர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் கேட்ட நிலையில், ஒரு நபர் இதை 8 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூ.67 கோடி) ஏலத்தில் வாங்கினார்



