2026-ன் உலகிலேயே வாழத் தகுந்த டாப் 10 நகரங்கள்பட்டியல் வெளியீடு

 

உலகின் மிகச்சிறந்த வாழத்தகுந்த நகரமாக முதலிடத்தைத் டென்மார்க் நாட்டின் தலைநகரான கோபன்ஹேகன் (Copenhagen) தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தக்கவைத்துள்ளது.

உலக அளவில் மனிதர்கள் எவ்வித சிரமமும் இன்றி, பாதுகாப்பாகவும் தரமாகவும் வாழ்வதற்கு உகந்த சிறந்த நகரங்களின் பட்டியலை உள்ளடக்கிய ‘குளோபல் லிவபிலிட்டி இண்டெக்ஸ் 2026’ அறிக்கையை எகனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட் (EIU) வெளியிட்டுள்ளது.

உலகில் எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் நிம்மதியாகவும் ,அமைதியாகவும் ,பாதுகாப்பாகவும் வாழ்வதற்கு ஏற்ற மிகச்சிறந்த நகரங்கள் எவை? என்பதை கண்டிறிய குளோபல் லிவபிலிட்டி இண்டெக்ஸ் 2026 நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு நடத்தி வருகிறது. அந்த வகையில் 2026 ஆண்டு நடத்திய ஆய்வு பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதில் டென்மார்க் நாட்டின் தலைநகரான கோபன்ஹேகன் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உலகின் நம்பர் 1 வாழத்தகுந்த நகரமாகத் தனது முதலிடத்தைத் தக்கவைத்துக் உள்ளது.

இந்த பட்டியலில் உலகெங்கிலும் உள்ள 173 முக்கிய நகரங்களில் அங்குள்ள சட்டம் ஒழுங்கு மருத்துவ வசதிகள், கல்வி, கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல், உள்கட்டமைப்பு ஆகிய 5 முக்கிய விஷயங்களை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரம் கல்வி, உள்கட்டமைப்பு, சட்டம் ஒழுங்கு ஆகிய மூன்று பிரிவுகளிலும் 100-க்கு 100 முழு மதிப்பெண்களை எடுத்து அள்ளியுள்ளது. ஒட்டுமொத்தமாக 98 புள்ளிகளுடன் உலகிலேயே வாழ மிகச்சிறந்த நகரமாக முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பட்டியலில் ஆஸ்திரியாவின் வியன்னா 2-வது இடத்தையும், சுவிட்சர்லாந்தின் ஜூரிச் 3-வது இடத்தையும் பிடித்துள்ளன.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் 4-வது இடத்தையும், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா 5-வது இடத்தையும் பிடித்து டாப் 5-க்குள் நுழைந்துள்ளன. இப்பட்டியலின் 6 முதல் 10 வரையிலான இடங்களில் முறையே ஆஸ்திரேலியாவின் சிட்னி, ஜப்பானின் ஒசாகா, நியூசிலாந்தின் ஆக்லாந்து, ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மற்றும் ஜப்பானின் டோக்கியோ ஆகிய நகரங்கள் தங்களின் முத்திரையைப் பதித்துள்ளன.

சர்வதேச அளவில் வாழத்தகுந்த முதல் 100 நகரங்களின் பட்டியலில் இந்திய நகரங்கள் ஒன்று கூட இடம் பெறாதது இந்திய மக்களுக்கும், பயணிகளுக்கும் சற்று ஏமாற்றத்தைத் தந்துள்ளது. இருந்தாலும், இந்தியாவில் உள்ள நகரங்களிலேயே நாட்டின் தலைநகரான புது டெல்லிதான் அதிக புள்ளிகளுடன் இந்திய அளவில் முதலாவதாகவும், உலகளவில் 120-வது இடத்திலும் உள்ளது.

புது டெல்லிக்கு அடுத்தபடியாக இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரான மும்பை 121-வது இடத்தையும், நம்ம தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை 123-வது இடத்தையும், ஐடி ஹப்-ஆன பெங்களூரு 127-வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்தியாவில் இருக்கும் இந்த 4 பெரிய மெட்ரோ நகரங்களுமே உலகளாவிய டாப் 100 பட்டியலுக்கு வெளியேதான் இன்னும் நீடிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.