கனடாவின் டொராண்டோ நகரில் நடைபெற்ற தெரு திருவிழா ஒன்றின் அருகே (சனிக்கிழமை) இன்று அடையாளம் தெரியாத மர்பநபர்கள் நடந்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் அப்பகுதியில் சுற்றிக்கொண்டிருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி முதலில் எச்சரித்த போலீஸார், பின்னர் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவித்தனர்.இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கனடாவில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு
லத்தீன் அமெரிக்க கலாச்சாரத்தைக் கொண்டாடும் வகையில் திருவிழா நடத்துவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு டொராண்டோவின் செயின்ட் கிளேர் வெஸ்ட் பகுதிக்கு ஆயிரக்கணக்கான மக்களை ஈர்க்கும் ஒரு முக்கிய நிகழ்வாக கொண்டாடப்பட்டது. இங்கு நேரடி இசை, நடனம் மற்றும் உணவு திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறும். இதனை காண ஏராளமான பொதுமக்கள் வருகை தந்திருந்தனர்.
இந்த நிலையில், இன்று காலை டொராண்டோவின் செயின்ட் கிளேர் அவென்யூ வெஸ்ட் மற்றும் ஆர்லிங்டன் அவென்யூ பகுதிக்கு நுழைந்த அடையாளம் தெரியாத மர்ப நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். அங்கு கூடியிருந்த பொதுமக்களை நோக்கி கண்மூடித்தனமான தூப்பாக்கி சூடுத் தாக்கலுதலை நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 க்கும் மேற்பட்டவர்கள் படுக்காயம் அடைந்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அறிந்த போலீஸார் விரைந்தனர். உயிரிழந்தவர்கள் உடல்கள் மற்றும் தூப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பொதுமக்கள் அந்தப் பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். தற்போது அந்த இடம் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறியுள்ள போலீஸார், இன்னும் குற்றவாளிகள் யாரும் பிடிபடவில்லை என்றும் எச்சரித்துள்ளனர்.
நேரில் பார்த்தவர்களின் அதிர்ச்சிப் வாக்குமூலம்:
துப்பாக்கிச்சூடு நடந்த சமயத்தில் அங்குள்ள உணவகம் ஒன்றின் அருகே அமர்ந்திருந்த வலேரி ரோட்ரிக்ஸ் என்பவர் கூறும்போது திடீரென மக்கள் அலறிக்கொண்டே ஓடுவதைப் பார்த்தேன். எங்களை தரையில் படுத்துக்கொள்ளுமாறு சிலர் கத்தினர். அங்கு என்ன நடக்கிறது என்றே எங்களுக்குத் தெரியவில்லை மிகவும் பயந்துவிட்டோம் என்றார்.
அந்தத் திருவிழாவில் கடை போட்டிருந்த பாட்ஸி குட்டிரெஸ் கூறும்போது நான் வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை வழங்கிக் கொண்டிருந்தபோது ஒரு பெரிய கூட்டமே உயிர்பயத்தில் ஓடி வருவதைப் பார்த்தேன். அதைப் பார்த்ததும் எல்லாரும் பதற்றமடைந்து வியாபாரத்தை நிறுத்திவிட்டோம். இது போன்ற பொதுநிகழ்ச்சிகளில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கக் கூடாது என வருத்தத்துடன் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்டு தனது எக்ஸ் (X) தளத்தில் செயின்ட் கிளேர் சல்சா திருவிழாவில் நடந்த இந்த கொடூர வன்முறையைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இதில் இரண்டு உயிர்கள் பறிபோயுள்ளன, பலர் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
கனடாவின் மிகப்பெரிய நகரமான டொராண்டோ, வட அமெரிக்காவிலேயே மிகவும் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, பொதுமக்கள் கூடும் இடங்களில் இது போன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அங்கு நடப்பது மிகவும் அரிதான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.



