இந்தியா to ஈரான்–, தேவையற்ற பயணங்களை தவிர்க்க இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

போர் மேகங்கள் சூழ்ந்துள்ள ஈரானுக்கு செல்ல திட்டமிட்டிருக்கும் பயணங்களை ஒத்தி வைக்க இந்தியர்களுக்கு, ஈரானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் மோதல்கள் காரணமாக, ஈரானுக்கான அனைத்து அத்தியாவசியமற்ற பயணங்களையும் இந்தியர்கள் உடனடியாக ஒத்திவைக்குமாறு தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் (Indian Embassy in Iran) அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக Indian Embassy in Iran வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு ஒன்றில் பாதுகாப்புச் சூழல் சீராகும் வரை ஈரான் வர திட்டமிட்டு இருக்கும் இந்தியர்கள், தங்களது மிகவும் அத்தியாவசியமற்ற பயணத்தை முழுமையாக ஒத்திவைக்க வேண்டுமென கேட்டு கொண்டுள்ளது.

அதே நேரம் தற்போது ஈரானில் தங்கியுள்ள இந்தியர்கள் வணிக ரீதியான விமானச் சேவைகளைப் பயன்படுத்தி தற்காலிகமாக இந்தியா திரும்புவது குறித்து பரிசீலிக்கவும் இந்திய தூதரகம் கேட்டு கொண்டுள்ளது. மேலும் ஈரானில் தொடர்ந்து இருக்க முடிவு செய்யும் இந்தியர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், உள்ளூர் செய்திகளை தொடர்ந்து கவனிக்குமாறும் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர். ஏரினில் இருக்கும் இந்தியர்கள் குறிப்பாக அந்நாட்டின் தெற்கு கடற்கரைப் பகுதிகள் போன்ற அதிக போர் பதற்ற சூழல் நிலவும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.