வார பலன்கள்மேஷம் முதல் மீனம் வரை . ஜூன் 11 – 17

 

மேஷம்:
பலன்கள்: இந்த வாரம் வீண் மன சஞ்சலம் உண்டாகும். தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். அதே நேரத்தில் புதிய வாடிக்கையாளர் பிடிக்க கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணிகளை தாமதம் இல்லாமல் முடிக்க பாடுபடுவார்கள். பண வரத்து திருப்திகரமாக இருக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். குழந்தைகளால் மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையின் மூலம் அனுகூலம் உண்டாகும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. நினைத்ததை சாதிக்கும் மன வலிமை உண்டாகும். பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும்.

கலைத் துறையினருக்கு பண வரத்து திருப்தி தரும். அரசியல் துறையினருக்கு வீண் கவலை அகலும். மாணவர்களுக்கு கல்வியை பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். பணிகளை தாமதம் இல்லாமல் முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

அஸ்வினி: இந்த வாரம் மற்றவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை. தொழில் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பண வரத்து திருப்திகரமாக இருக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். கூடுதல் பணிச் சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலிடத்திடம் உங்களது கருத்துக்களை தெரிவிக்கும் போது கவனமாக பேசுவது நல்லது. வீண் அலைச்சல், தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது.

பரணி: இந்த வாரம் வீண் அலைச்சல் ஏற்படலாம். அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். சுக்கிரன் தனது சப்தம பார்வையால் உங்கள் ராசியைப் பார்க்கிறார். எதிர்ப்புகள் விலகும். ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பண வரத்து அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.

கார்த்திகை 1ம் பாதம்: இந்த வாரம் புதிய நபர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உடல் நல பாதிப்பு ஏற்படலாம். ஏற்கனவே செய்த ஒரு செயலை நினைத்து வருந்த நேரிடும். பயணங்கள் செல்ல நேரிடலாம். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை.

பரிகாரம்: நவ கிரகத்தில் செவ்வாயை வழிபட துன்பங்கள் நீங்கும். இன்பங்கள் உண்டாகும்.

ரிஷபம்:
பலன்கள்: இந்த வாரம் உங்களது செயல்களை யாரும் குறை கூறக்கூடாது என்பதை மனதில் கொண்டு செயல்களை செய்வீர்கள். வருமானம் கூடும். சந்திரன் சஞ்சாரத்தால் காரிய தடைகள் நீங்கும். திட்டமிட்டபடி எல்லாம் நடக்கும். ராசியாதிபதி சுக்கிரன் சஞ்சாரம் ஆடம்பரமான பொருட்களை வாங்க தூண்டும். கடன் தொல்லை குறையும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத தடைகள் ஏற்பட்டு நீங்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பல தடைகளை சந்திக்க வேண்டி இருந்தாலும் முடிவில் வெற்றி உங்கள் பக்கமே இருக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். வாழ்க்கை துணையின் எண்ணப்படி பொருட்கள் வாங்க நேரும். கணவன்- மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்துவீர்கள்.

உறவினர்கள் நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினருக்கு தடை நீங்கி பணிகள் வேகம் பிடிக்கும். அரசியல் துறையினருக்கு செல்வாக்கு கூடும். மாணவர்களுக்கு பல தடைகளையும் தாண்டி கல்வியை கற்று வெற்றி பெறுவீர்கள். அடுத்தவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் தொழில் வியாபாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரம் தொடர்பான வழக்கு விவகாரங்களை தள்ளி போடுவது நல்லது. எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் பணத் தேவை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

ரோகிணி: இந்த வாரம் குடும்பத்தில் ஏதாவது வீண் விவகாரங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கு இடையே திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். பிள்ளைகளுக்காக கூடுதலாக பாடுபட வேண்டி இருக்கும். சகோதரர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.

மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த வாரம் பண வரத்து கூடும். ஏற்கனவே செய்த ஒரு காரியத்தின் பலன் இப்போது கிடைக்கும். திடீர் மன வருத்தம் ஏற்படலாம். மற்றவர்களுக்கு உதவப் போய் வீண் பிரச்சனை உண்டாகலாம். கவனம் தேவை. வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையாக செல்வது நல்லது. எல்லா நன்மைகளும் உண்டாகும். மன துயரம் நீங்கும். சிற்றின்ப செலவு அதிகரிக்கும். மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கி சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம் கவனமாக இருப்பது நல்லது.

பரிகாரம்: ராஜ ராஜேஸ்வரியை வணங்க மனது மகிழும் படியான அளவில் காரியங்கள் நடக்கும். கடன் பிரச்சனை தீரும்.

மிதுனம்:
பலன்கள்: இந்த வாரம் சமய சந்தர்ப்பம் அறிந்து காரியங்களை செய்வீர்கள். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். சந்திரன் சஞ்சாரத்தால் வீண் கவலைகள் நீங்கும். வழக்கு விவகாரங்களை தள்ளி போடுவது நல்லது. ராசியாதிபதி புதன் சஞ்சாரத்தால் திடீர் உடல் நல பாதிப்பு அகலும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வேகம் இருக்காது. நிதானமான போக்கு காணப்படும். பண வரத்து தாமதப்படும்.

தொழில் வியாபாரத்திற்காக கடன் வாங்க நினைப்பதை தள்ளிபோடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும் வேலைப் பளுவால் மன சலிப்பும் உண்டாகும். குடும்பத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கு இடையே இருந்த மன வருத்தம் வார இறுதியில் மாறி சகஜ நிலை ஏற்படும். குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள்.

பயணங்கள் தாமதப்படும். பெண்களுக்கு வீண் அலைச்சலும், காரிய தாமதமும் ஏற்படும். கலைத் துறையினருக்கு உடல் நலத்தில் அக்கறை தேவை. அரசியல் துறையினருக்கு நன்மை உண்டாகும். மாணவர்களுக்கு வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு பாடங்களை கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். செவ்வாய் சஞ்சாரம் மூலம் சாதகமான பலன் தரும். விரும்பியது கிடைக்கும். அதே நேரத்தில் அதற்கான கூடுதலாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். மனதில் ஏதாவது ஒரு கவலை இருக்கும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவு ஏற்படும்.

திருவாதிரை: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் லாபம் குறையும். பண வரத்து சீராக இருக்கும். ஆர்டர்கள் வருவது தாமதப்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். சக ஊழியர்களிடம் இருந்த மன வருத்தங்கள் நீங்கும். மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு செயல்பட வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கு இடையே வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள், நண்பர்கள் மூலம் கிடைக்கும் உதவி தாமதப்படும்.

பரிகாரம்: நவ கிரகத்தில் புதனை வணங்க வாழ்க்கை வளம் பெறும். மனதில் நிம்மதி ஏற்படும்.

கடகம்:
பலன்கள்: இந்த வாரம் எடுத்த காரியம் தாமதத்திற்கு பிறகு சாதகமான பலன் தரும். ராசியாதிபதி சந்திரன் சஞ்சாரம் மனோதிடத்தைத் தரும். அவசரப்பட்டு வாக்குறுதி கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். தாயாரின் உடல் நிலையில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான விவகாரங்கள் தாமதமாக நடைபெறும். புதிய ஆர்டர்கள் கிடைத்தாலும் அதை உடனடியாக நிறைவேற்ற பாடுபட வேண்டி இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் கிடைக்கலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கு இடையே பந்த பாசங்கள் கூடும். வாழ்க்கை துணையின் மூலம் லாபம் கிடைக்கும். உறவினர்கள் உதவி கிடைக்கும். பெண்களுக்கு அவசரப்பட்டு எந்த வாக்குறுதியையும் கொடுக்காமல் இருப்பது நல்லது.

கலைத் துறையினருக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். அரசியல்துறையினருக்கு காரியங்களில் வேகம் ஏற்படும். மாணவர்களுக்கு சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அனுசரித்து செல்வதன் கல்வியில் மேன்மை உண்டாகும்.

புனர் பூசம் 4ம் பாதம்: இந்த வாரம் கூடுதலாக செய்யும் முயற்சிகள் மூலம் விரும்பியபடி காரியத்தை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். தொழிலில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது. மன நிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

பூசம்: இந்த வாரம் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எடுத்துக் கொண்ட வேலைகளில் ஏதாவது வேண்டாத பிரச்சனை தலை தூக்கலாம். எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது.

ஆயில்யம்: இந்த வாரம் கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிக்கும் சூழ்நிலை உண்டாகும். சுக்கிரன் சஞ்சாரம் பண வரத்தைத் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவுகள் உண்டாகும். சூரியன் சஞ்சாரத்தால் எதிர்ப்புகள் நீங்கி காரிய அனுகூலம் உண்டாகும். நீண்ட தூர பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: சந்திரனை வணங்க குழப்பங்கள் நீங்கி மன தெளிவு உண்டாகும். பொருள் சேர்க்கை இருக்கும்.

சிம்மம்:
பலன்கள்: இந்த வாரம் உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தைரியமும், உற்சாகமும் கூடும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வாய்க்கு ருசியாக உணவுகளை உண்பீர்கள். வார இறுதியில் நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். வெளி வட்டார தொடர்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பொறுப்புகள் அதிகரிக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

பண வரத்து திருப்திகரமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். கணவன், மனைவிக்குள் இருந்து வந்த மனக் கசப்புகள் விலகி ஓரளவு நல்ல ஒற்றுமையுடன் வாழ நேரிடும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். பெண்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

பிள்ளைகளால் பெருமை சேரும். பெண்களுக்கு எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். மனோதிடம் கூடும். கலைத் துறையினருக்கு உற்சாகமாக காணப்படுவீர்கள். அரசியல் துறையினருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். கல்விக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

மகம்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாக நிதி நிலை உயரும். கடன் பிரச்சனைகள் குறையும். தொழில் போட்டிகள் விலகும். வேலை தேடுபவர்களுக்கு உத்தியோகம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுகமான எதிர்ப்புகள் விலகும்.

பூரம்: இந்த வாரம் குடும்பத்தில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். குதூகலம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். தொல்லைகள் நீங்கும். எதையும் எளிதாக செய்து முடிக்கும் திறமை உண்டாகும். பயணங்கள் வெற்றியை தரும்.

உத்திரம் 1ம் பாதம்: இந்த வாரம் யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. மனக் கவலை உண்டாகும். வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. உடல் சோர்வு உண்டாகலாம். வீண் அலைச்சலை தவிர்த்து எடுத்து கொண்ட காரியங்களில் கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம்: சிவனை வணங்க காரிய தடை நீங்கும். எதிலும் வெற்றி கிடைக்கும்.

கன்னி:
பலன்கள்: இந்த வாரம் அலைச்சல்கள் குறையும். சுபச் செலவு அதிகரிக்கும் அதே நேரத்தில் வரவும் இருக்கும். சந்திரன் சஞ்சாரத்தால் உடல் ஆரோக்கியம் பெறும். யாருக்கும் எந்த வாக்குறுதியும் அளிக்காமல் இருப்பது நன்மை தரும். எதிர்ப்புகள் அகலும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். தொழில் விருத்தியடையும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். மேல் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். குடும்பத்தில் திருப்திகரமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கு இடையில் நெருக்கம் அதிகரிக்கும். குடும்ப விஷயங்களை மூன்றாவது நபரிடம் பேசாமல் இருப்பது நன்மை தரும். குழந்தைகள் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

பெண்களுக்கு வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் ஒரு முறைக்கு இரு முறை அலைந்தே செய்து முடிக்க வேண்டி வரும். கலைத் துறையினருக்கு எதிர்ப்புகள் குறையும். அரசியல் துறையினருக்கு முயற்சிகள் வெற்றி பெறும். மாணவர்களுக்கு கல்விக்கான செலவு கூடும். பாடங்கள் படிப்பதில் வேகம் இருக்கும்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் எதிர்பார்த்த வெற்றிக்கு கூடுதல் முயற்சி பலன் அளிக்கும். மனதில் புதிய உற்சாகம் உண்டாகும். சூரியன் சஞ்சாரம் மனதில் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பண வரத்து எதிர்பார்த்தபடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ராசியிலுள்ள சூரியன் சஞ்சாரத்தால் கெட்ட கனவுகள் தோன்றலாம். நட்பாக இருந்தவர்கள் பிரிந்து செல்லலாம். சுக்கிரனின் சஞ்சாரம் நல்ல பலன்களை தரும்.

அஸ்தம்: இந்த வாரம் தொழில் வியாபாரம் வழக்கம் போல் நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். பிள்ளைகளுக்காக சில பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். அவர்களை அன்புடன் நடத்துவது நல்லது.

சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த வாரம் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பண வரத்து திருப்தி தரும். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படலாம். கவனம் தேவை. பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும்.

பரிகாரம்: விஷ்ணு சகஸ்ர நாமம் படித்து பெருமாளை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.

துலாம்:
பலன்கள்: இந்த வாரம் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். அலைச்சல் இருக்கும். பண வரவும் இருப்பதுடன் பயணங்கள் செல்லவும் நேரலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் புத்தி சாதூரியத்தால் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவார்கள்.

வியாபாரம் தொடர்பான பயணங்கள் சாதகமான பலன்தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன திருப்தி காண்பார்கள். அலுவலகம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த மன வருத்தங்கள் நீங்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பிரிந்து சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். அதனால் மன மகிழ்ச்சி உண்டாகும்.

பெண்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரும். கலைத்துறைய்னருக்கு பயணங்கள் உண்டாகும். அரசியல் துறையினருக்கு பொருளாதாரம் ஏற்றம் பெறும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் அடைய பாடுபட்டு படிப்பீர்கள். கல்வி தொடர்பான பயணங்கள் ஏற்படும்.

சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த வாரம் மனதில் இருந்த கவலை நீங்கும். செவ்வாயின் சஞ்சாரத்தால் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். வீண் கவலை ஏற்படும். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் ஏற்படும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. பூர்வீக சொத்துக்களில் வரும் வருமானம் குறையலாம்.

சுவாதி: இந்த வாரம் தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும் பண வரத்து திருப்தி தரும். கடன்களை அடைப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மேல் அதிகாரிகள் திருப்தியடைவார்கள்.

விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் இருந்த இறுக்கமான நிலை மாறும். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும்.

பரிகாரம்: துர்க்கை அம்மனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். கடன் பிரச்சனை சொத்து தகராறு தீரும்.

விருச்சிகம்:
பலன்கள்: இந்த வாரம் எல்லா வகையிலும் நற்பலன்கள் உண்டாகும். வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். மனதுக்கு பிடித்தமான காரியங்களை செய்து மனநிறைவடைவீர்கள். உங்களது செயல்களை மற்றவர்கள் பாராட்டுவார்கள். முக்கிய நபர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சுய நம்பிக்கை அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு உத்தியோகம் கிடைக்கும்.

மனதில் இருந்த கவலைகள் நீங்கி அலுவலக வேலைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். முன்னேற்ற வாய்ப்புகள் கிடைக்கும். தொழில், வியாபரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எதிர்பாராத வளர்ச்சி காண்பார்கள். மனதில் தைரியம் கூடும். குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். நீங்கள் கூறும் வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டாகும்.

கணவன், மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். ஆன்மிக பயணங்கள் செல்ல நேரிடும். குழந்தைகளால் பெருமை பெறுவீர்கள். பெண்களுக்கு சுய நம்பிக்கை அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசியல் துறையினருக்கு மனம் மகிழும் சம்பவங்கள் நிகழும். மாணவர்களுக்கு உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும்.

விசாகம் 4ம் பாதம்: இந்த வாரம் எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை. இருந்த பிரச்சனை குறையும். பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது.

அனுஷம்: இந்த வாரம் வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரத்து கூடும். பயணம் செல்ல நேரலாம். வெற்றி பெற தடைகளை தாண்டி உழைக்க வேண்டி இருக்கும். பெரியோரின் ஆலோசனைபடி செயல்படுவது நல்லது. வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள்.

கேட்டை: இந்த வாரம் நக்ஷத்ராதிபதி புதன் சஞ்சாரம் அனுகூலமான பலன்களை தரும். பண வரவு மன திருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். சுக்கிரன் சஞ்சாரம் மூலம் நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை.

பரிகாரம்: குல தெய்வத்திற்கு தீபம் ஏற்றி வணங்க பிரச்சனைகள் தீரும். மனோதைரியம் கூடும்.

தனுசு:
பலன்கள்: இந்த வாரம் எந்த ஒரு வேலையும் மிகவும் சரியாக நடக்க வேண்டும் என எண்ணுவீர்கள். காரிய அனுகூலம் உண்டாகும். சந்திரன் சஞ்சாரத்தால் எதிர்பாராத சந்திப்புகள் ஏற்படலாம். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். தன்னம்பிக்கை உண்டாகும். எப்படிப்பட்ட சிக்கல்களையும் தீர்க்கும் வல்லமை ஏற்படும். அடுத்தவருக்கு உதவி செய்து அதன் மூலம் மதிப்பு உயரும்.

அவசரப்படாமல் எதையும் செய்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். கை நழுவிச் சென்ற ஆர்டர்கள் மீண்டும் கிடைக்க பெறலாம். முயற்சிகள் சாதகமான பலனை தரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கட்டளை இடும் பதவிகள் கிடைக்க பெறுவார்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கு இடையே சுமூக உறவு இருக்கும். பெண்களுக்கு எப்படிப்பட்ட சிக்கலான பிரச்சனைகளையும் தீர்க்கும் வல்லமை உண்டாகும். கலைத் துறையினருக்கு எதிர்பாராத சந்திப்புகள் ஏற்படலாம். அரசியல் துறையினருக்கு முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு சக மாணவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் மதிப்பு கூடும்.

மூலம்: இந்த வாரம் தொழில் வியாபாரததில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பட்ட சிரமங்கள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப் பளு குறைந்து காணப்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம்.

பூராடம்: இந்த வாரம் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கு இடையே இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் மூலம் இருந்த மன வருத்தம் நீங்கி அவர்களுடன் சந்தோஷமாக வெளியே சென்று வருவீர்கள். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மனக் கவலை நீங்கி நிம்மதி உண்டாகும்.

உத்திராடம் 1ம் பாதம்: இந்த வாரம் வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளி போடுவதும் நல்லது. காரிய அனுகூலம் ஏற்படும். உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவருவீர்கள். எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பண வரத்து கூடும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும்.

பரிகாரம்: தட்சிணா மூர்த்தியை நெய் தீபம் ஏற்றி வணங்க பண வரத்து கூடும். காரிய தடைகள் விலகும். தொழில் சிறக்கும்.

மகரம்:
பலன்கள்: இந்த வாரம் அடுத்தவரை நம்பி எதிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மையை தரும். சந்திரன் சஞ்சாரத்தால் ஆன்மிக ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டி இருக்கலாம். நீண்ட நாட்களாக நடந்து முடியாமல் இருந்த ஒரு வேலை நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தந்தையின் உடல் நிலையிலும் கவனமாக இருப்பது நல்லது.

கடன் விவகாரங்கள் கால தாமதமாகும். வர வேண்டிய பணம் தாமதப்படலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வேகம் இருக்காது. ஆனால் வருமானம் வழக்கம் போல் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கவனமாக பணி செய்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களையும், வாழ்க்கை துணையையும் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

பெண்களுக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலை வார இறுதியில் நடந்து முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கலைத் துறையினருக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். அரசியல் துறையினருக்கு லாபம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நல்லது.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் மற்றவர்களுடன் பகை ஏற்படலாம். முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பிடிக்கும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு கை கொடுப்பார்கள். மனதில் இருந்து வந்த சஞ்சல மனநிலையில் மாற்றம் இருக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தால் தரும சிந்தனை உண்டாகும். பண நெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

திருவோணம்: இந்த வாரம் தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வியில் அக்கறை காண்பிப்பீர்கள். நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பணத் தேவை பூர்த்தியாகும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வணங்கி வர துணிச்சல் அதிகரிக்கும். காரிய தடைகள் நீங்கும்.

கும்பம்:
பலன்கள்: இந்த வாரம் எந்த விஷயத்திலும் உடனடி தீர்வு காண முடியாத இழுபறி நிலை காணப்படும். சந்திரன் சஞ்சாரத்தால் புதிய நட்புகள் கிடைக்கும். பண வரத்து திருப்திகரமாக இருக்கும். கவன தடுமாற்றம் உண்டாகலாம். மனதில் திடீர் கவலை தோன்றும். சகோதரர் வழியில் மன வருத்தம் தரக்கூடிய சம்பவம் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. பண வரத்தும் நிதானமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை செய்யும் இடத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வதும் நல்லது. பிள்ளைகளிடம் எதையும் பக்குவமாக சொல்வது நன்மையை தரும். வாழ்க்கை துணையுடன் வாக்கு வாதத்தை தவிர்ப்பதும் நல்லது.

பெண்களுக்கு புதிய நட்புகள் கிடைக்கும். கலைத் துறையினருக்கு புதிய முயற்சிகள் கைகொடுக்கும். அரசியல் துறையினருக்கு பதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு சக மாணவர்கள் ஆசிரியர்களை அனுசரித்து செல்வதன் மூலம் கல்வியில் முன்னேற்றம் அடைய தேவையான உதவிகள் கிடைக்கும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போதும் வெளியூர்களுக்கு செல்லும் போதும் கூடுதல் கவனம் தேவை. சூரியன் சஞ்சாரத்தால் முன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண் தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது. வளர்ச்சி பெற மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

சதயம்: இந்த வாரம் செலவை குறைப்பதன் மூலம் பண தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும். மேலிடத்தின் மூலம் மன மகிழும்படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் இருந்த தடுமாற்றம் நீங்கும். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படலாம். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பண வரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும்.

பரிகாரம்: பெருமாளை தீபம் ஏற்றி வணங்கி வர கடன் பிரச்சனை தீரும். சிக்கலான பிரச்சனைகள் தீரும்.

மீனம்:
பலன்கள்: இந்த வாரம் பண வரத்து திருப்திகரமாக இருக்கும். எதிர்ப்புகள் நீங்கும். சந்திரன் சஞ்சாரம் புதிய தொடர்புகளை உண்டாக்கும். பெண்கள் மூலம் நன்மை உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ராசியில் சஞ்சரிக்கும் சனி பல வகையிலும் வருமானத்தை பெற்று தருவார். சிலர் புதிய வீடு கட்டும் பணி தொடங்குவார்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, தேடி வரும். ஆனால் கனவு தொல்லை உண்டாகலாம். நீண்ட நேரம் கண் விழிக்க நேரிடும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. சகோதரர் வழியில் மன வருத்தம் உண்டாகலாம். திடீரென்று கவனம் தடுமாறலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடுமையான உழைப்பிற்கு பின் நல்ல பலன் பெறுவார்கள், போட்டிகள் விலகும்.

குடும்பத்தினர் மூலம் உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கு இடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். பெண்களுக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கலைத்துறையினருக்கு பண வரத்து திருப்தி தரும். அரசியல் துறையினருக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பதன் மூலம் கல்வியில் வெற்றி உண்டாகும்.

பூரட்டாதி 4ம் பாதம்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் டென்ஷனுடன் காணப்படுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த மன கவலைகள் நீங்கி தெளிவான நிலை ஏற்படும்.

உத்திரட்டாதி: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேற்றுமை ஏற்படும். சிற்றின்ப சுகம் குறையும். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போதும் பயணங்களின் போதும் கூடுதல் கவனம் தேவை. நண்பர்கள் உறவினர்களிடம் சிறு மனத் தாங்கல்கள் வரலாம்.

ரேவதி: இந்த வாரம் எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மன உறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். எந்த விவகாரத்தில் சிக்கினாலும் சாமர்த்தியமாக மற்றவரை முன் நிறுத்திதான் தப்பித்துக் கொள்ள வேண்டி வரும். சுக்கிரனின் சஞ்சாரத்தால் நல்ல பலன்கள் வரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும்.

பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட தடை நீங்கி காரியம் நடக்கும். எதிலும் வெற்றி கிடைக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே