பிரான்சில் விமானம் விழுந்து நொறுங்கி 11 பேர் பலி

 

பிரான்ஸ் நாட்டின் நான்சி நகருக்கு அருகே டாம்ப்லெயின் பகுதியில் உள்ள நான்சி எஸ்ஸி விமான நிலையத்தில் இருந்து ஸ்கைடைவிங் பயிற்சிக்காக சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இதில் 5 பயிற்சி மாணவர்கள், 5 பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் ஒரு விமானி உள்பட 11 பேர் சென்றனர்.

விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்திலேயே தொழில்நுட்ப கோளாறு காரணமாக குடியிருப்புகள் நிறைந்த புல்வௌி பகுதியில் செங்குத்தாக கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் அதில் சென்ற 11 பேரும் உயிரிழந்து விட்டனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை.