மறைந்த நடிகர் பாக்யராஜின்பன்முகத் திரைப்பயணமும் அரசியல் வாழ்வும்: ஓர் பார்வை!

 

இந்திய திரையில் சிறந்த ஆளுமை கொண்டவர் கே.பாக்யராஜ். இவரது படைப்புகள் அத்தனையும் ஜனரஞ்சகமானது. திரைக்கதை வசனம் அமைப்பதில் நிபுணர். பாரதிராஜாவின் சினிமா பாசறையில் சினிமாவைக் கற்றுத் தேர்ந்தவர்.

இயக்குனர்,கதாசிரியர்,தயாரிப்பாளர்,கவிஞர்,இசையமைப்பாளர்,அரசியல் துறை என பன்முகத்துறை கொண்டவர் பாக்யராஜ். இவரது படங்களில் “சுவர் இல்லாத சித்திரங்கள்”,புதியவார்ப்புகள், விடியும்வரை காத்திரு,இன்று போய் நாளை வா,கன்னிப் பருவத்திலே,ஒரு கை ஓசை,

தூறல் நின்னு போச்சு,மௌனகீதங்கள்,பாமா ருக்மணி,பொய்சாட்சி,இது நம்ம ஆளு,ராசுக்குட்டி, டார்லிங் டார்லிங் டார்லிங்,முந்தானை முடிச்சு, சின்ன வீடு, எங்க சின்னராசா,தாவணிக்கனவுகள்,பவுனு பவுனுதான்,சுந்தரகாண்டம்,ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி,நான் சிகப்பு மனிதன் (கௌரவ வேடம்),அன்புள்ள ரஜினிகாந்த் (கௌரவ வேடம்),விதி (கௌரவம் வேடம்)இப்படத்தில் போஸ்ட் மேனாக ஓர் பஞ்சாயத்தில் சினிமா படப்பிடிப்பு நடப்பது போல் அமைந்த நகைச்சுவைக் காட்சியில் கலக்கியிருப்பார் பாக்யராஜ்.

இவரின் கைவண்ணத்தில் உருவான “அந்த ஏழு நாட்கள் “படத்தில் காதலின் மகிமையையும்,ஓர் பெண்ணின் திருமாங்கல்யத்தின் புனிதத்தையும், தமிழ் கலாச்சாரம் சீர்கெடாமல் அமைத்த விதம் பெரும் வரவேற்பை பெற்றது. “ருத்ரா” படத்தில் வங்கியை கொள்ளையடிக்கும் காட்சி இன்றளவிலும் நகைச்சுவையுடன் ரசிக்கக்கூடியது.எம்ஜியார் நூற்றாண்டு விழா இலங்கை கண்டியில் நடைபெற்ற போது அவரை நேரில் சந்தித்து பல விடயங்களை பகிர்ந்து கொண்டதை நினைவில் கொள்கின்றேன்.

அந்நிகழ்வில் பாக்யராஜ் நடுவராக தலைமை தாங்கிய பட்டிமன்றம் சிறப்பாக அமைந்திருந்தது. எவ்வித பந்தா இல்லாமல் அனைவரிடமும் சாதாரணமாகவும், இயல்பாகவும் இவர் பழகிய விதம் இலங்கை ரசிகர்களை மகிழச்செய்தது.

ஒரு “கைதியின் டயரி”படம் ஹிந்தியில் மறுபதிப்பு செய்த நேரத்தில் கமலஹாசன் செய்த வேடத்தை ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமித்தாப்பச்சன் செய்தார். அப்போது பாக்யராஜின் திரைக்கதை அமைப்பைப் பார்த்து பிரமித்த அமித்தாப்பச்சன் இவரை வெகுவாக பாராட்டினார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் “தாவணிக்கனவுகள் “படத்தில் இணைந்து நடித்ததை தனது வாழ்நாளில் பெரும் பாக்கியமாக கருதுகிறார்.அத்துடன் மக்கள் திலகம் எம்ஜியார் அவர்கள் இவரைத் தனது வாரிசு எனக்கூறியதை சிறப்பாக எண்ணி பெருமை கொண்டவர் என்பதும் வாழ்த்துக்குரியது.

சிறப்புக்குரிய பல விருதுகளையும் அடைந்துள்ளார் பாக்யராஜ்.கீழ் காணும் படம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஓர் விழாவில் 14.08.2019 அன்று எடுத்ததாகும். இப்படத்தில் கே.பாக்யராஜ்,ரஜினிகாந்த்,சிவகுமார், வைரமுத்து,பாரதிராஜா ஆகியோர் காணப்படுகின்றனர்.

இவரது திரையுலக குருநாதர் திரு.பாரதிராஜா அவர்கள் சமீபத்தில் காலமான செய்தி மறைவதற்கு முன் திரு.பாக்யராஜ் அவர்களின் மறைவு ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாக்கியராஜ் என அழைக்கப்படும் கிருஷ்ணசுவாமி பாக்கியராஜ் 7 ஜனவரி 1953 அன்று பிறந்தார். பிறப்பிடம் ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோயில் என்னும் ஊரில் பிறந்தவர்.

பெற்றோர் பெயர் கிருஷ்ணசாமி-அமராவதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார் பாக்யராஜ் . செல்வராஜ், தன்ராஜ் என இரு அண்ணன்கள் உண்டு. தமிழ்த் திரையுலகில், நடிகர், வசன எழுத்தாளர், திரைக்கதை அமைப்பாளர், இயக்குநர், சிறப்பு வேடமேற்ற நடிகர், தயாரிப்பாளர், பத்திரிகையாளர் எனப் பன்முகம் கொண்ட ஒரு கலைஞர். இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக, 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களில் திரைப்படக்கலை பயின்றவர்.

2026 ஜூன் 27 அன்று உடல் நலக் குறைவால் சென்னையில் காலமானார். 1977-ஆம் ஆண்டில் இயக்குநர் பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலேவில் உதவியாளராக, தமது திரை வாழ்க்கையை துவங்கினார். பின் பாரதிராஜாவின் இரண்டாவது படமான கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியதோடு, கவுண்டமணியுடன் ஒரே ஒரு காட்சியில் தோன்றி நடித்திருந்தார்.

பாரதிராஜாவின் மூன்றாவது படமான சிகப்பு ரோஜாக்கள் படத்தில் இரண்டு காட்சிகளில் நினைவில் நிற்கும்படியான, உணவு விடுதிப் பணியாளர் வேடம் ஏற்று நடித்தார். இப்படத்திற்கு வசனமும் எழுதியிருந்தார்.

தனது அடுத்த படமான புதிய வார்ப்புகள் படத்தில் பாரதிராஜா, பாக்யராஜை வசனகர்த்தாவாக மட்டுமன்றி, கதாநாயகனாக அறிமுகம் செய்தார்.

ஒரு இயக்குநராக தமது முதல் படமாக பாக்யராஜ் உருவாக்கியது சுவர் இல்லாத சித்திரங்கள் (1979). (இடைக்காலத்தில் அவர் ராஜேஷ் கதாநாயகனாக அறிமுகமான கன்னிப்பருவத்திலே படத்தில் வில்லன் வேடம் ஏற்று தனது இருப்பைப் பதிவு செய்திருந்தார்). முதல் படத்தில் சுதாகர் கதாநாயகனாகவும் சுமதி நாயகியாகவும் நடிக்க, ஒரு குணச்சித்திரப் பாத்திரத்தை பாக்யராஜ் ஏற்றிருந்தார். நகைச்சுவையும், சோகமும் சரிபாதியாக அதில் அமைந்திருந்தது.

அடுத்து, சொந்தத் தயாரிப்பான ஒரு கை ஓசை திரைப்படம் துவங்கி தனது முத்திரையை பதிக்கத் தொடங்கினார். அஸ்வினி இணைந்து நடித்த இப்படத்தில் அவர் வாய் பேச இயலாத ஊமைக் கதாநாயகனாக மேற்கொண்ட பாத்திரம் இரசிகர்களின் மனம் கவர்ந்தது.

அடுத்து வெளியான மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா ஆகியவை பாக்யராஜின் முத்திரையை முழுமையாகக் கொண்டு வெற்றிப் படங்களாயின. அடுத்து மர்மங்கள் மற்றும் அதிரடி கொண்ட அதேசமயம் தனது முத்திரையுடனும் கூடிய ஒரு படமாக விடியும் வரை காத்திரு என்னும் திரைப்படத்தைப் பாக்யராஜ் இயக்கி நடித்தார்.

பாக்யராஜ் தனது முத்திரையை முழுமையாகப் பதிந்து வெற்றி ஈட்டிய திரைப்படங்களாக அந்த 7 நாட்கள், தூறல் நின்னு போச்சு போன்றவை கருதப்படுகின்றன. டார்லிங், டார்லிங், டார்லிங் வெற்றிப்படத்தை இயக்கி அதில் நடித்த பூர்ணிமாவை மனைவியாக ஏற்றுக் கொண்டார்.

பின், 1982 ம் ஆண்டு வெளியான முந்தானை முடிச்சு. ஊர்வசி அறிமுகமான இத்திரைப்படம் சென்னையிலும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் வெள்ளி விழா கொண்டாடியது. இதில் பாக்யராஜ் கையாண்ட சில விஷயங்கள் (முருங்கைக்காய் போன்றவை) இன்றளவும் பேசப்படுகிறது.

அதேபோல் சின்ன வீடு, எங்க சின்ன ராசா, இது நம்ம ஆளு போன்ற படங்களுக்கு பெரிய வசூலையும், விருதுகளையும் பெற்றுத்தந்தன.

பாக்கியராஜ் என அழைக்கப்படும் கிருஷ்ணசுவாமி பாக்கியராஜ் (7 சனவரி 1953 – 27 சூன் 2026) ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோயில் என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் பெயர் கிருஷ்ணசாமி-அமராவதி. மூன்றாவது மகனாகப் பிறந்தார். செல்வராஜ், தன்ராஜ் என இரு அண்ணன்கள் உண்டு. தமிழ்த் திரையுலகில், நடிகர், வசன எழுத்தாளர் , திரைக்கதை அமைப்பாளர், இயக்குநர், சிறப்பு வேடமேற்ற நடிகர், தயாரிப்பாளர், பத்திரிகையாளர் எனப் பன்முகம் கொண்ட ஒரு கலைஞர். இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக, 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களில் திரைப்படக்கலை பயின்றவர். 2026 சூன் 27 அன்று உடல் நலக் குறைவால் சென்னையில் காலமானார்.

கே.பாக்யராஜ் மனைவி நடிகை பூர்ணிமா ஜெயராம், பிள்ளைகள்:சாந்தனு உள்ளிட்ட இருவர்.

தனது முதல் இரண்டொரு படங்களுக்குப் பிறகு, பாக்யராஜ் அப்போது துணைக்கதாபாத்திரங்களில் நடித்து வந்த “பிரவீணா” என்னும் நடிகையை மணந்தார். இவர் பாக்யராஜின் “இன்று போய் நாளை வா”, “மௌன கீதங்கள்”, “பாமா ருக்மணி” ஆகிய சில படங்களிலும் நடித்தவர். சில வருட மண வாழ்க்கைக்குப் பிறகு, நோய்வாய்ப்பட்டு பிரவீணா இறந்தார். சில காலத்திற்குப் பின்னர், பாக்யராஜ் அப்போது முன்னணி நாயகியரில் ஒருவராக இருந்த பூர்ணிமா ஜெயராமை மணந்தார். இவர்களுக்கு, சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற மகனும் உண்டு. இவர்கள் இருவரையுமே பாக்யராஜ் திரையுலகில் அறிமுகம் செய்திருக்கிறார். சரண்யா முதல் படத்திற்குப் பிறகு நடிக்கவில்லை. சாந்தனு தன் முதல் படமான சக்கரக்கட்டி என்னும் படத்தில் நாயகனாக அறிமுகமாகி நடித்து வருகிறார்.

அரசியல் ஈடுபாடு

துவக்கம் முதலே தன்னை எம். ஜி. ஆரின் ரசிகராக வெளிப்படுத்தியிருந்த பாக்யராஜ், ருத்ரா திரைப்படம் வெளியான காலகட்டத்தில் அ.தி.மு.க. கட்சியில் இணைந்திருந்தார். இப்படத்தில், ஒரு பாடல் காட்சியில், ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆரின் உருவப் படங்கள் திரையில் தோன்றுமாறு அமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பிறகு, அக்கட்சியிலிருந்து வெளியேறி சொந்தக் கட்சியாக எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம் துவக்கினார். பின்னர், நாளடைவில் அது கலையவே, தி.மு.க. கட்சியில் சேர்ந்தார்.

எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்பது தமிழ்நாட்டில் 11 பிப்ரவரி 1989 இல் பாக்யராஜ் தொடங்கிய ஒரு அரசியல் கட்சியாகும். இந்தக் கட்சி 1991 கேரள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. அதில் ஒரு வேட்பாளர் 87 வாக்குகளைப் பெற்றிருந்தார். இந்தக் கட்சி ஆரம்பக் கட்டத்திலேயே படுதோல்வி அடைந்தது.பாக்யராஜ் பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். ஏப்ரல் 5, 2006 அன்று, கட்சித் தலைவர் கருணாநிதி முன்னிலையில் பாக்யராஜ் திமுகவில் இணைந்தார், அவர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெ ஜெயலலிதாவை விமர்சித்தார். பின்னர் திமுகவில் இருந்து விலகி அரசியலில் பார்வையாளராக இருந்து வந்தார்.

இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டவர் பாக்யராஜ். முற்றிலும் நகைச்சுவைப் படமான ‘இன்று போய் நாளை வா’ என்னும் திரைப்படத்தில் கூட ஜெயகாந்தன் எழுதிய ‘சமூகம் என்பது நாலு பேர்’ என்னும் சிறுகதையைப் பற்றிய ஒரு குறிப்பு வருமாறு அமைத்திருந்தார். இவர் 1988 ஆம் ஆண்டு முதல் பாக்யா எனும் வார இதழ் ஒன்றினையும் நடத்தி வந்தார்.

பாக்யராஜ் உருவாக்கிய இயக்குநர்கள்

தமது குருவான பாரதிராஜாவைப் போலவே, பாக்யராஜும், பல திறமையான இயக்குநர்களை உருவாக்கினார். இவர்களில், பாண்டியராஜன், ரா.பார்த்திபன், வி.சேகர், லிவிங்ஸ்டன், ஜி. எம். குமார் ஆகியோர் வெற்றிகரமான இயக்குநர்களாகத் திகழ்ந்தனர்.இறுதியாக நடிகை குஷ்புவின் மகளின் திருமண விழாவில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. நடிகர் திரு. பாக்யராஜ் அவர்களின் மறைவுக்கு இலங்கை ரசிகர்கள் சார்பாக எமது எமது துயர் நிறைந்த கண்ணீர் அஞ்சலி.