தன் குருவான பாக்யராஜ் குறித்து எக்ஸ் தளத்தில் உருக்கமாக போஸ்ட் போட்டிருப்பதுடன் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார் பார்த்திபன். பாக்யராஜ் புகைப்படம் முன்பு இருக்கும் பேட், பேப்பர், பேனாவுக்கான விளக்கத்தை தெரிவித்துள்ளார்.
பார்த்திபன் விளக்கம்: கே. பாக்யராஜ் தன் மனைவி பூர்ணிமா உடன் சேர்ந்து கோவாவுக்கு சென்று குஷ்பு, சுந்தர் சி. மகள் அவந்திகாவின் காதல் திருமணத்தில் கலந்து கொண்டார். சென்னை திரும்பிய அவர் ஜூன் 27ம் தேதி காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அரசு மரியாதை உடன் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது. பாக்யராஜின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அதன் முன்பு ஒரு பெரிய பேட், பேப்பர், பேனா வைத்து அதில் அன்புடன் உங்கள் பாக்யராஜ் என்று எழுதப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அந்த பேட், பேப்பர், பேனா ஏன் என எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார் பார்த்திபன்.
சிஷ்யன் பார்த்திபன்: பாக்யராஜின் குருவான பாரதிராஜாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார் பார்த்திபன். மதுரை காட்டுராடு வரை சென்றேன். ஆனால் அதன் பிறகு பாரதிராஜா மட்டும் தான் மண்ணுக்குள் சென்றார். இன்று என் குரு பாக்யராஜ் சாருக்காக பெசன்ட் நகர் மின் மயானம் வரை சென்றேன் என ட்வீட்டியிருக்கிறார்.
அந்த ட்வீட்டில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,எழுதட்டையில் சில பேப்பர் வைத்து அதில் அன்புடன் உங்கள் பாக்யராஜ் என்று கொட்டை எழுத்துக்களில் எழுதி அவரின் இதயப் பகுதியில் நான் வைத்தேன். அது கடைசி வரை சென்றது. கால்மாட்டில் தீபம், நெஞ்சில் கற்பூரம் ஏற்றி வைத்த பிறகு அந்த தீக்குகை நோக்கி பயணம் துவங்கியது. பாக்யராஜை குருவாக ஏற்ற பிறகு அடிபணிந்தே பணி புரிந்து வந்தேன். அதிகாலையிலேயே கிளம்பி ஆபீஸுக்கு சென்றுவிடுவேன். பாக்யராஜ் சாரின் அறையை சுத்தம் செய்து அவர் அமரும் இடத்தில் Pad paper pen -ஐ தயார் நிலையில் வைப்பேன். தற்போதும் அந்த PPP அவரின் இதயத்திற்கு அருகில் வைத்திருக்கிறேன். அது நகர்ந்து அந்த தீப்பிழம்புக்குள்…
கண்ணன் ரவிக்கு கோரிக்கை: அஸ்தியை பெற காத்திருக்கும் சாந்தனு அருகில் வந்து ஆறுதல் சொல்ல அமர்ந்த தயாரிப்பாளர் திரு. கண்ணன் ரவியிடம், அப்பொழுது நீங்கள் செய்தது(ராவணக் கோட்டம் படத்தை தயாரித்தது) போதாது, தற்போது சாந்தனுவை வைத்து படம் எடுங்க என்றேன். அந்த இடத்தில் இது பற்றி பேசுவது சரியா இல்லையா என்கிற யோசனையை தாண்டி. பாக்யராஜ் சாருக்கு நன்றி கடனாக சாந்தனுவை வைத்து கோடிட்ட இடங்களை நிரப்புக எடுத்தவன் நான். மீண்டும் சாந்தனு வெற்றி பெற விரும்புகிறேன்.
திறமையை தாண்டி வெற்றி மட்டுமே இங்கு கொண்டாடப்படும். பாக்யராஜ் சார் கடைசியாக யோசித்து வைத்த படத்தின் பெயர் மயான கொள்ளை என்று அவரின் தற்போதைய உதவியாளர் தெரிலித்தார். கூகுள் வழி செல்லாத இடத்திற்கு சென்றுவிட்ட குருவின் அஸ்தியை பெசன்ட் நகர் கடலில் கரைத்துவிட்டு நினைவை மட்டும் சுமந்தபடி இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
பார்த்திபனின் ட்வீட்டை பார்த்த பிறகே பாக்யராஜ் வீட்டின் முன்பு அவரின் புகைப்படத்துடன் எழுதட்டையை ஏன் வைத்திருக்கிறார்கள் என்பது புரிகிறது. எதையும் மாற்றி யோசிக்கும் பார்த்திபன் தன் குருவின் நினைவாக செய்த காரியம்



