நடிகையை விரட்டி விரட்டி பாலியல் தொல்லை!.. ..

 

கன்னட நடிகை திவ்யா சுரேஷுக்கு நடுரோட்டில் நடந்த பாலியல் அத்துமீறல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.கன்னட சினிமாவில் சில படங்களில் நடித்தவர் திவ்யா சுரேஷ். கன்னட பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இவர் போட்டியாளராக இருந்தார். பெங்களூரில் தங்கியுள்ள இவர் தொடர்ந்து தனது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில்தான் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை பற்றி ஒரு வீடியோவை அவர் வெளியிட்டிருக்கிறார்..

நான் கடந்த 28ம் தேதி இரவு 11 மணியளவில் எனது சகோதரியுடன் வெளியே நின்று கொண்டிருந்தேன். காரில் ஏறுவதற்காக நாங்கள் சென்றபோது ஒரு வாலிபர் எங்களை பின் தொடர்ந்து வந்தார். திடீரென அந்த நபர் என் உடலின் மீது கை வைத்து பாலியல் தொல்லை கொடுத்தார். நான் கண்டித்தும் அவர் அதை பொருட்படுத்தவில்லை. எனவே நானும் என் சகோதரியும் வேகமாக ஓடி காரில் ஏறினோம்.

ஆனாலும் அங்கே வந்து அவர் மோசமாக நடந்து கொண்டார். அந்த வழியாக சென்ற நபர் அந்த வாலிபரை திட்டினார். ஆனாலும் வாலிபர் அதை பொருட்படுத்தவில்லை. மீண்டும் மீண்டும் எங்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் நோக்கத்தில் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டார். அவர் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியிருக்கிறார்.

மேலும், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அந்த வாலிபரை அவர் செல்போனிலும் பதிவு செய்திருக்கிறார். அந்த வீடியோவை பகிர்ந்து பெங்களூர் காவல் துறையை அவர் டேக் செய்திருக்கிறார்.