சமூக வலைதளங்களில் சமீபகாலமாக, “பூஜை செய்து சாமியாடியவருக்குப் பறக்கும் சக்தி கிடைக்காததால் மலையிலிருந்து விழுந்து உயிரிழந்தார்” என்ற செய்தி காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
இந்தத் தகவல் முற்றிலும் ஆதாரமற்றது மற்றும் தவறானது. பாதிக்கப்பட்டவர், வழக்கமாக பூஜைகளை முடித்த பிறகு, மலையின் ஓரத்தில் நின்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதேபோல், இப்போதும் அவர் அந்த இடத்தில் நின்று பூஜை செய்துகொண்டிருந்தார்.
அப்போது, அவர் நின்றிருந்த தரையில் அதிகப்படியான எண்ணெய் சிதறியிருந்தது. கவனிக்காத நிலையில், அந்த எண்ணெயில் கால் வைத்ததால் கால் வழுக்கி, எதிர்பாராதவிதமாக அவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
இது ஏதோ ஒரு அமானுஷ்ய நிகழ்வோ அல்லது சக்தி தேடும் முயற்சியோ அல்ல; எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்து என்பதே உண்மை. ஆதாரமற்ற வதந்திகளை நம்பிப் பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.



