சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட ஒரு லட்சம் வெளிநாட்டு கரப்பான் பூச்சிகள் பறிமுதல்

 

ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டு வந்த சுமார் ஒரு லட்சம் வெளிநாட்டு கரப்பான் பூச்சிகளை ஒரே நபரிடம் இருந்து அதிகாரிகள் பறிமுதல் செய்துள்னர். ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் பாத்தர்ஸ்ட் நகில் உள்ள சட்டவிரோதமாக வெளிநாட்டை சேர்ந்த கரப்பான்பூச்சிகள் வளர்க்கப்பட்டு வருவதாக தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கரப்பான்பூச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவற்றின் மதிப்பு சுமார் ரூ.1.35கோடியாகும். மடகாஸ்கர் கரப்பான்பூச்சிகள் 5 முதல் 8 சென்டிமீட்டர் நீளம் கொண்ட உலகின் மிகப்பெரிய கரப்பான் பூச்சிகளில் ஒன்றாகும். இவை ஆஸ்திரேலியாவின் 2.3 முதல் 3.6 சென்டிமீட்டர் நீளம் கொண்ட நாட்டின் பொதுவான கரப்பான் பூச்சியை விட மிகவும் பெரியது. கரப்பான் பூச்சிகள் பெரிய உருவத்தால் குறைவான பூச்சிகளே தேவைப்படுவதால் செலவு குறைந்த ஊர்வன உணவாக விற்கப்படுகின்றன. மடகாஸ்கர் கரப்பான் பூச்சி மற்றும் டூபியா கரப்பான் பூச்சியை ஆஸ்திரேலியாவில் வைத்திருக்கவோ, இனப்பெருக்கம் செய்யவோ அல்லது விற்கவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.