கைதிகளிடையே பயங்கர மோதல்.. 57 காவலர்கள் சிறைபிடிப்பு
02 Sep,2023
முதல் தற்போது வரை அங்கு 430 கைதிகள் சிறைக்குள்ளேயே கொல்லப்பட்டனர் எஸ்.என்.ஏ.ஐ. அமைப்பு ஆயுத வேட்டையை நடத்தி, சில கைதிகளை இடம் மாற்றியது மேலும் படிக்க தென் அமெரிக்க கண்டத்தின் மேற்கு கடற்கரையோரம் உள்ள நாடு ஈக்வடார். இதன் தலைநகரம் குவிடோ. இந்நாட்டின் அண்டை நாடுகளான கொலம்பியா மற்றும் பெரு ஆகியவை உலகின் மிக பெரும் கொகைன் என் போதைப் பொருள் உற்பத்தியாளர்களாக இருந்த வருகின்றன. எனினும், ஈக்வடார் நாட்டில் சமீப காலம் வரை போதை பொருள் சம்பந்தமான சிக்கல்கள் தோன்றாமல் அமைதியான நாடாகவே இருந்து வந்தது. தற்போது அங்கு நிலைமை மாறி, போதை பொருள் கடத்தலில் ஒரு முக்கிய மையமாகவே இந்நாடு மாறி வருகிறது. போதை பொருள்
கடத்தலில் ஈடுபட்டு வரும் கொலம்பியா மற்றும் மெக்சிகோ நாட்டை சேர்ந்த பல்வேறு குழுக்களை சேர்ந்தவர்கள் அந்நாட்டு சிறையில் கைதிகளாக உள்ளனர். அவர்களுக்கிடையே சண்டைகள் நடந்து வருவது வழக்கம். அண்மைக் காலமாக அங்குள்ள சிறைச்சாலைகளில் ஒரு கும்பலை சேர்ந்த கைதிகள் மற்றொரு போட்டி கும்பலை தாக்குவதும், கூட்டாக கொல்வதும் அதிகரித்துள்ளது. 2021 முதல் தற்போது வரை அங்கு 430 கைதிகள் சிறைக்குள்ளேயே கொல்லப்பட்டுள்ளனர்.
கொல்லப்படுபவர்களின் உடல்கள் கூட முழுமையாக கிடைக்காமல் துண்டு துண்டுகளாக கிடைக்கிறது. அந்நாட்டில் சிறைச்சாலை மேற்பார்வையை எஸ்.என்.ஏ.ஐ. எனும் அமைப்பு நிர்வகித்து வருகிறது. எஸ்.என்.ஏ.ஐ. உத்தரவின் பேரில் சிறைச்சாலையில் கைதிகள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை தேடும் வேட்டை ஒன்று நடைபெற்று அனைத்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர் நடவடிக்கையாக பல கைதிகள் இடம் மாற்றி தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில், தலைநகர் குவிடோவில் கையெறி குண்டு தாக்குதலும், சிறைச்சாலை
மேற்பார்வையை கவனிக்கும் எஸ்.என்.ஏ.ஐ. அமைப்பின் தலைமை அலுவலகத்திற்கு வெளியே ஒரு காரிலும், அந்த அமைப்பு இயங்கிய அலுவலகத்தின் அருகில் ஒரு இடத்திலுமாக, 2 இடங்களில் குண்டு வெடிப்பும் நிகழ்ந்துள்ளது. இது சம்பந்தமாக கொலோம்பியா நாட்டை சேர்ந்த ஒருவர் உட்பட 6 பேரை காவல்துறை கைது செய்தது. இவர்கள் அனைவரும் முன்பே ஆள் கடத்தல், கொள்ளை, மற்றும் கொலைக்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. தங்கள் பலத்தை காட்ட இது போன்ற
வன்முறை தாக்குதல்களில் இக்குழுக்கள் ஈடுபடுவது வழக்கம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் அந்நாட்டு சிறைச்சாலையை சேர்ந்த 6 சீர்திருத்த நிலையங்களில் உள்ள கைதிகள் உட்பட 57 சிறை காவலாளிகள் மற்றும் 7 சிறை அதிகாரிகளை, அங்குள்ள போதை பொருள் கடத்தல் சிறை கைதிகள், சிறைக்குள்ளேயே பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ஜுவான் ஜபாடா பணயமாக உள்ளவர்களின் பாதுகாப்பிற்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.