புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமியின் கடைசி ஆசை.. திருமணம் செய்து வைத்த பெற்றோர்கள்
01 Sep,2023
..
பத்து வயதே நிரம்பிய எம்மா எட்வர்ட்ஸ் என்ற சிறுமி, ரத்தப் புற்றுநோயால் இறப்பதற்கு முந்தைய நாள், தன் மனதிற்கு மிகவும் பிடித்த “காதலனை” மணமுடித்து, தன்னுடைய கடைசி ஆசையை நிறைவேற்றிக் கொண்ட சம்பவம் அனைவரையும் உலுக்கியுள்ளது.
.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் எம்மாவிற்கு ரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. எப்படியும் தங்கள் செல்ல மகள் இந்த கொடிய நோயிலிருந்து மீண்டுவிடுவார் என எம்மாவின் பெற்றோர்கள் நம்பிக்கையோடு இருந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் வந்த செய்தியை கேட்டு, எம்மாவின் பெற்றோர்கள் மிகுந்த கவலை கொண்டனர். அதாவது, எம்மாவிற்கு வந்துள்ள புற்றுநோய் மிகுந்த தீவிரத்தன்மை கொண்டது என்றும், இது வெள்ளை ரத்த அனுக்களை அழித்து வருவதால் குணப்படுத்த முடியாத நிலைக்கு சென்று விட்டதாகவும், இன்னும் சில நாட்களே எம்மா உயிர் வாழ்வார் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. ஜூலை 11-ம் தேதி எல்லாரையும் சோகத்தில் ஆழ்த்திவிட்டு, இந்த உலகை விட்டுப் பிரிந்து சென்றாள் எம்மா.
எம்மாவின் வகுப்புத் தோழனும், நண்பர்கள் வட்டாரத்தில் டிஜே என அழைக்கப்படும் டேனியல் மார்ஷல் கிரிஸ்டோபர் வில்லியம்ஸை திருமணம் செய்து கொள்வதுதான் எம்மாவின் கனவாக இருந்தது என அலினா அனைவரிடமும் தெரிவித்தார். இதற்கு முன்பு ஒருமுறை, பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில், மதிய சாப்பாடு நேரத்தின் போது இருவரும் “திருமணம்” செய்ய முயற்சித்துள்ளனர். அந்த சமயத்தில் இருவருக்கும் எட்டு வயதுதான் ஆகியிருந்தது.
எம்மாவின் கடைசி ஆசை இதுதான் என தெரிந்து கொண்டதும், அவளது பெற்றோர்களும் நண்பர்களும் அந்த ஆசையை நிறைவேற்ற தயாரானார்கள். இருவருக்கும் திருமணம் நிச்சியக்கப்பட்டு, ஜூன் 29-ம் தேதி நூறு பேர் முன்னிலையில் இவர்களின் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெரும் இடத்திற்கு, கனத்த இதயத்தோடு தனது மகளின் கையை பிடித்து அழைத்து வந்தார் ஆரோன் எட்வர்ட்ஸ். எப்படி இவர்கள் இருவரும் பள்ளியில் சந்தித்து கொண்டனர் என அவர்களின் மூன்றாம் வகுப்பு ஆசிரியர்கள் அங்கு சிறு உரை நிகழ்த்தினர்.
.
“இந்த வயதில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் டிஸ்னிலேண்ட் போக வேண்டும் என ஆசைப்படுவார்கள். ஆனால் எம்மாவோ, திருமணம் செய்துகொள்ள வேண்டும், நல்ல மனைவியாக இருக்க வேண்டும், மூன்று குழந்தைகளுக்கு தாயாக வேண்டும் என்றெல்லாம் விரும்புகிறாள். நானும் டிஜே-யின் அம்மாவும் இதை தெரிந்து கொண்ட போது, “பிள்ளைகள் ஆசைப்படுகிறார்கள். அவர்களுக்கு நாம் திருமணம் செய்து வைப்போம்” என்றுதான் கூறிக் கொண்டோம். வெகு விரைவில் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது” எனக் கூறுகிறார் அலினா எட்வர்ட்ஸ்.
.
இவர்களின் திருமண நிகழ்ச்சி இரண்டு நாட்களுக்குள் முடிவடைந்துவிட்டது. “அவள் விரும்பியதை நான் கொடுத்துவிட்டேன்” என எம்மாவின் தந்தையும் மகிழ்ச்சியடைந்தார். இந்த திருமண நிகழ்ச்சியை இருவரின் நண்பர்களும் சேர்ந்து ஒருங்கிணைத்தனர். எம்மாவின் நெருங்கிய தோழி அவளுக்கு மணப்பெண் தோழியாக இருந்தாள்.