300க்கும் மேற்பட்டோரை கொன்ற ஈராக் குண்டுவெடிப்பின் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை !
29 Aug,2023
2016 ஆம் ஆண்டு ஈராக்கின் பாக்தாத்தில் 300 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்ற வாகன குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மூவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் பண்டிகையின் போது மக்கள் இரவு பொழுதைக் கழித்த சந்தர்ப்பத்தில் இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
2003 ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பிற்குப் பிறகு ஈராக்கில் நடந்த மிகக் கொடிய ஒற்றைக் குண்டுத் தாக்குதல் இதுவாகும்.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் மூவருக்கும் ஞாயிறு அல்லது திங்கட்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்படும் என பிரதமர் முகமது ஷியா அல் சுடானியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.