நம்பவேமாட்டீங்க.. 2 BHK வீடு வெறும் 83 ரூபாய் மட்டுமே.. எங்க தெரியுமா?
25 Aug,2023
சமீப காலமாக வெளிநாட்டினர் அதிகமாக முதலீடு செய்யும் ஹாட்ஸ்பாட் இடமாக ஐரோப்பா வளர்ந்து வருகிறது. இங்குள்ள கைவிடப்பட்ட, பராமபரிப்பின்றி கிடக்கும் பழங்கால வீடுகளை, இடங்களை வாங்க உலகம் முழுவதும் உள்ள செல்வந்தர்கள் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் இதையெல்லாம் விட, மிச்சிகன் நகரத்தில் இருக்கும் பழைய வீட்டை விற்பனை செய்வதற்கான விளம்பரம் ஒன்று அனைவரின் ஆர்வத்தையும் தூண்டியுள்ளது. அப்படி என்ன விளம்பரம் அது?
அமெரிக்காவின் மிச்சிகன் நகரத்தில் உள்ள போண்டியாக்கின் மையப் பகுதியில் அமைந்திருக்கிறது இந்த வீடு. சமீபத்தில் இந்த வீடு விற்பனைக்கு தயாராக உள்ளதாக மிச்சிகன் ரியல் எஸ்டேட் மார்கெட்டில் விளம்பரம் ஒன்று பட்டியலிடப்படிருந்தது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், முதலில் இந்த விளம்பரத்தை பார்த்த அனைவருமே நிச்சயம் அதிர்ச்சி அடைந்திருப்பார்கள். அட ஆமாங்க, அமெரிக்காவில் இரண்டு படுக்கையறை கொண்ட வீடு ஒன்று வெறும் ஒரு டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.83) விற்பனைக்கு வந்துள்ளது. இப்படியொரு வாய்ப்பை யார்தான் தவறவிடுவார்கள், சொல்லுங்கள்.
இந்த வீடு ஒரு டாலருக்கும் அதிகமான தொகைக்கு விற்பனையாகும் என நம்பிக்கையோடு இருக்கிறார் இந்த விளம்பரத்தை வெளியிட்ட புரோக்கர். வீடு வாங்க நினைப்பவர்களின் ஆர்வத்தை வெகுவாக அதிகரித்துள்ளது இந்த விளம்பரம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. “மிச்சிகன் நகரின் போண்டியாக் மையப் பகுதியில் அமைந்துள்ள உலகிலேயே மிகவும் மலிவான வீட்டை பெருமையோடு உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்” என விளம்பரத்தின் வாசகம் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கிறது.
724 சதுர அடி கொண்ட இந்த வீட்டில், இரண்டு படுக்கையறைகள், ஒரு கழிப்பறை, ஒரு சமையலறை உள்ளது. இவ்வுளவு வசதி கொண்ட விடு ஒரு டாலருக்கு கிடைக்கிறது என்றால் யார்தான் சும்மா இருப்பார்கள். “இது வெறும் வீடல்ல, ரியல் எஸ்டேட் சாகசத்திற்கான வாழ்நாள் டிக்கட்” என சும்மா இருப்பவர்களையும் சுரண்டிப் பார்க்கிறது இந்த விளம்பரத்தின் வாசகம்.
வீட்டை புதுமையாக மாற்ற வேண்டும் என நினைப்பவர்கள் கூட இதை தாராளமாக வாங்கலாம். “வீட்டின் உள்ளே நுழைந்து பார்க்கும் போது உங்களுக்கே சிலிர்ப்பான அனுபவம் கிடைக்கும். இந்த வீட்டில் உள்ள ஒவ்வொரு மூலை, முடுக்கும் உங்களின் படைப்புத் திறனுக்காக காத்துக் கொண்டிருக்கிறது” என இந்த விளம்பரத்தை பட்டியலிட்டவர் கூறுகிறார்.
இந்தச் சலுகை ஆகஸ்ட் 23-ம் தேதி காலை 10 மணி வரை மட்டுமே. அதன்பிறகு இந்த வீட்டை யாரும் ஏலம் கேட்க முடியாது. 1956-ல் கட்டப்பட்ட இந்த வீட்டின் ஆரம்ப விலை மிகவும் குறைவாக இருந்தாலும், எப்படியும் ரூ.37 லட்சம் முதல் ரூ.47 லட்சம் வரையில் இந்த வீடு விற்பனையாகும் என ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் எதிர்பார்க்கின்றனர்.