ரஷியாவில் ராணுவ ட்ரோன்களை இயக்க பள்ளிகளில் மாணவர்களுக்கு பயிற்சி
22 Aug,2023
மாணவர்களுக்கான ராணுவப் பயிற்சியை மீண்டும் அறிமுகப்படுத்துவதாக கடந்த நவம்பரில் அறிவித்தது. எதிரி ட்ரோன்களை எதிர்கொள்வதற்கான வழிமுறையைக் கற்றுக்கொள்வார்கள். வரும் கல்வியாண்டில் ராணுவ ஆளில்லா விமானங்களை எவ்வாறு இயக்குவது மற்றும் எதிர்கொள்வது என்பதை ரஷிய இளைஞர்கள்
கற்றுக்கொள்வார்கள் என்று ரஷிய கல்வி அமைச்சகம் வெளியிட்ட பாடத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கு எதிராக ஏறக்குறைய 17 மாத போர் தாக்குதலை முன்னெடுத்துச் செல்லும் ரஷியா, 2023ம் ஆண்டு முதல் குழந்தைகளுக்கான சோவியத் பாணி ராணுவப் பயிற்சியை மீண்டும் அறிமுகப்படுத்துவதாக கடந்த நவம்பரில் அறிவித்தது. 15 முதல் 17 வயது வரையிலான மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த ட்ரோன் பாடநெறி,
ரஷியா கிட்டத்தட்ட தினசரி உக்ரேனிய ட்ரோன் தாக்குதல்களால் குறிவைக்கப்படுவதால், அவற்றின் பயன்பாடு முக்கியமானதாக இருக்கும். இதுகுறித்து ரஷிய கல்வி அமைச்சகத்தின் வலைத்தளத்தில், "மாணவர்கள் போரில் ஆளில்லா வான்வழி வாகனங்களை பயன்படுத்தக்கூடிய வழிகளைப் பற்றிய புரிதலைப் பெறுவார்கள். அவர்கள் ட்ரோன் பைலட்டிங்கில் நடைமுறைப் பணிகளைச் செய்வார்கள். அத்துடன், எதிரி ட்ரோன்களை எதிர்கொள்வதற்கான வழிமுறையைக் கற்றுக்கொள்வார்கள்" என்று குறிப்பிட்டிருந்தது.