200 அதிநவீன ஏவுகணைகளை கொள்வனவு செய்கின்றது அவுஸ்திரேலியா
21 Aug,2023
அமெரிக்காவிடமிருந்து 200 அதிநவீன ஏவுகணைகளை கொள்வனவு செய்கின்றது அவுஸ்திரேலியா
.
அவுஸ்திரேலியாஅமெரிக்காவிடமிருந்து டொம் ஹவ்க் நவீன ஏவுகணைகளை கொள்வனவு செய்யவுள்ளது.
புதிய உடன்படிக்கையின் கீழ் அவுஸ்திரேலியா 200 டொம்ஹவ்க் ஏவுகணைகளை கொள்வனவு செய்யவுள்ளது.
உலகில் மூன்றுநாடுகளிடமே இந்த ஏவுகணைகள் காணப்படுகின்றன.
பலர் ஏவுகணை யுகம் என அழைக்கும் காலத்திற்குள் நாங்கள் நுழைகின்றோம், அவுஸ்திரேலியாவை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் அவுஸ்திரேலிய படையினர் ஈடுபடுவதற்கு இந்த ஆயுதங்கள் மிகவும் அவசியமானவை பாதுகாப்பு தொழில்துறை அமைச்சர் பட்கொன்ரோய் தெரிவித்துள்ளார்.
துரிதமாக செயற்படுவதற்காக இந்த வகை ஆவணங்களை நாங்கள் கொள்வனவு செய்கின்றோம் என தெரிவித்துள்ள அவர் உள்நாட்டில் ஏவுகணைகளை தயாரிக்கும் திட்டமும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
டொம்ஹவ்க் ஏவுகணைகள் 1500 கிலோமீற்றர் வரை செல்லக்கூடியவை