அமெரிக்கா தான் காரணம் குற்றம் சாட்டும் ரஷ்யா
13 Aug,2023
உக்ரைன் ரஷ்யப்போரில், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளிடம் இராணுவ உதவி பெற்று உக்ரைன் தாக்குதல் நடத்திவருகிறதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
இந்த போரில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளிடம் இராணுவ உதவி பெற்று ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு உக்ரைன் பதில் தாக்குதலுக்கு நடத்தி வருகிறது.
குறிப்பாக பதில் தாக்குதலில் டிரோன்களை அதிக அளவில் பயன்படுத்தி அடிக்கடி ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கு பதிலடியாக ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்துகிறது.
இந்த நிலையில் உக்ரைனிடம் இருந்து டொனெட்ஸ்க் கைப்பற்றிய ரஷ்யா, தனது பகுதியாக அறிவித்துள்ளது.
இந்த பிராந்தியத்தின் மாகிவ்கா பகுதியில் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாகவும், அதுவும் அமெரிக்கா வழங்கிய கொத்துக் குண்டுகள் மூலம் பயன்படுத்தப்பட்டதாகவும் ரஷ்யா குற்றச்சாட்டியுள்ளது.
இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 6 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.