தாய்லாந்தில் பெண் ஒருவருக்கு 1,41,708 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற பெண் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார்.
தாய்லாந்து நாட்டில் வழக்கத்திற்கு மாறான வகையில், ஒரு பெண்ணுக்கு நீண்ட காலத்திற்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவர் செய்த குற்றத்தினால், இவருடைய நாட்டினர் மட்டுமல்லாமல் மற்ற நாடுகளைச் சேர்ந்த நபர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிட் ஃபண்ட் மூலம் பணம் வசூலித்து, பலரை ஏமாற்றிய குற்றத்திற்காக சமோய் திப்யாசோ என்ற பெண்ணுக்கு 1,41,708 வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தன்னுடைய சிட் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்தால் உங்களுக்கு அதிக தொகை கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி பலரிடம் இருந்தும் இவர் பணம் வசூலித்துள்ளார்.
தாய்லாந்து நாட்டினர் மட்டுமின்றி உலகெங்கிலும் இருந்து 16,000-க்கும் மேற்பட்டோர் இவரது திட்டத்தில் சேர்ந்திருக்கின்றனர். இதன் மூலமாக மட்டுமே 200 முதல் 300 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான தொகை இவருக்கு கிடைத்துள்ளது.
இதற்கு முன்பு தாய்லாந்து அரசுக்குச் சொந்தமான பெட்ரோலிய நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார் சமோய். தாய் அரசு விமானப் படையில் இவருக்கு இருந்த தொடர்புகளை பயன்படுத்தி, தனது சிட் ஃபண்ட் திட்டம் சட்டப்பூர்வமானது, நம்பகமானது என அனைவரையும் நம்ப வைத்துள்ளார். தாய்லாந்து நாட்டின் அரச குடும்பத்தினர் மற்றும் ராணுவ அதிகாரிகளையும் தன்னுடைய தன்னுடைய சிட் ஃபண்டில் முதலீடு செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார். தாய்லாந்தில் மட்டுமல்லாமல், கேரளாவிலும் இவரது சிட் ஃபண்டால் பலரும் ஏமாந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. தங்கள் நிதி பிரச்னைகள் தீரும் என்ற நம்பிக்கையில் கேரளாவைச் சேர்ந்த பலரும் இந்த திட்டத்தில் முதலீடு செய்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.
இவர் இப்படி பலரை ஏமாற்றில் கோடிக்கணக்கில் பணத்தை ஏமாற்றியுள்ளார் என்ற விஷயமெல்லாம் 1980-களில் தெரிய வந்தது. இதன் காரணமாக, பலரை ஏமாற்றி மோசடி செய்த குற்றத்திற்காக அவருக்கு 1,41,078 வருடங்கள் சிறைத் தண்டனை விதித்து தண்டனை வழங்கியது தாய்லாந்து அரசு. செய்த குற்றத்திற்காக உலகிலேயே ஒருவருக்கு வழங்கிய அதிகபட்ச சிறைத் தண்டனை இதுதான்.
ஆனால் இவர் சிறையில் வெறும் எட்டு ஆண்டுகள் மட்டுமே இருந்தார். அந்த சமயத்தில், மோசடி குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டவர்களுக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை மட்டுமே வழங்க வேண்டும் என்ற சட்டம் அப்போது தாய்லாந்தில் நடைமுறையில் இருந்தது. இதனால், பத்து ஆண்டுகளுக்குள்ளாகவே அவர் சிறையிலிருந்து விடுதலையானார்.
சிட் ஃபண்டுகள் என்றால் என்ன?
அக்கம்பக்கத்தினர், தெரிந்தவர்கள் என குழுவாக சேர்ந்து மாதம் மாதம் சிறு தொகையை முதலீடு செய்து சேர்வதையே சிட் ஃபண்டுகள் என அழைக்கிறார்கள். இதன் மூலம் பணத்தை சேமித்து, எளிதில் கடன் பெறலாம் என்ற ஆசையில் தான் பலரும் இதுபோன்ற சிட் ஃபண்டுகளில் சேர்கிறார்கள். இந்தியா மற்றும் பிற நாடுகளில் இது மிகவும் பிரபலமாக இருக்கிறது.
வங்கியில் எளிதில் கடன் பெற முடியாதவர்கள், அவசரத்திற்கு பணம் தேவைப்படுவோர், மோசமான கிரெடிட் ஹிஸ்டரி கொண்டவர்கள் போண்றோர்களே இதுபோன்ற சிட் ஃபண்டுகளில் அதிகமாக சேர்கிறார்கள். இதில் நம்பிக்கை தான் பிராதனம். இதுபோன்ற பெரும்பாலான சிட் ஃபண்டுகள் அரசால் ஒழுங்குமுறை செய்யப்படாதவையாக இருப்பதால், இதில் மோசடி நடப்பதற்கு அதிகளவு வாய்ப்புள்ளது. ஆனால் ஒரு சிலர் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு மக்களிடம் வசூலித்த பணத்தை எடுத்துக் கொண்டு தலைமறைவு ஆகிவிடுகிறார்கள். புகழ்பெற்ற அல்லது நம்பிக்கைக்குரிய நிறுவனமாக இருந்தாலும், சிட் ஃபண்டுகளில் முதலீடு செய்வதென்பது எப்போதுமே பிரச்னைக்குரியது.
இதில் முதலீடு செய்துள்ள வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் பொருட்டும், மோசடி நடைபெறுவதை தடுப்பதற்காக பல நாடுகளில் இதுபோன்ற சிட் ஃபண்டுகள் ஓழுங்குமுறை செய்யப்பட்டுள்ளன. ஆகையால், இதுபோன்ற திட்டங்களில் முதலீடு செய்வதற்கு முன், அதன் சட்ட, திட்டங்கள், நிபந்தனைகள் ஆகியவற்றை நன்கு ஆராய்ந்து பார்க்க வேண்டும்.