முன்னாள் பிரதமருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை! எம்பி பதவி இழப்பு.. தேர்தலில் போட்டியிட முடியாது
05 Aug,2023
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது பெற்ற பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்காமல் அவற்றை விற்று சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் அந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகி உள்ளது. இந்த தீர்ப்பில் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
இதனை அடுத்து அவர் எம்பி பதவியை இழக்கிறார். அதுமட்டுமின்றி அவர் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.