அதிக சம்பளம் தரும் நாடு எது தெரியுமா? விபரம் இதோஸ
27 Jul,2023
மத்திய கிழக்கு நாடுகளில் ஊதியத் தொகை அதிகம் என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.மத்திய கிழக்கு நாடுகளில் ஊதியத் தொகை அதிகம் என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வெளிநாட்டினருக்கு அதிக சம்பளம் தரும் நாடு எது என்பது குறித்த ஆய்வுத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த நாட்டில் இந்தியர்கள் கணிசமான அளவு வேலைபார்க்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது. ECA என்ற சர்வதேச அமைப்பு அதிக ஊதியம் தரும் நாடுகள் குறித்த ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் சவுதி அரேபியாதான் வெளிநாட்டவருக்கு அதிக சம்பளம் தரும் நாடு என தெரியவந்துள்ளது.
இங்கு பணியாற்றும் மேலாளர்கள் சராசரியாக ஆண்டுக்கு இந்திய மதிப்பில் ரூ. 88.64 லட்சம் வரை பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த சம்பள தொகை 3 சதவீதம் அளவுக்கு குறைந்திருந்தாலும், ஒட்டு மொத்த அளவில் சவுதிதான் அதிக ஊதியத்தை வெளிநாட்டவருக்கு தருகிறதாம்.
இதுகுறித்து ECA சர்வதேச அமைப்பின் ஆய்வு பிரிவு மேலாளர் ஆலிவர் ப்ரான் கூறுகையில், ‘ஊதியம் வழங்குவதில் மத்திய கிழக்கு நாடுகள் தாராளமாக நடந்து கொள்கின்றன. அதிலும் குறிப்பாக சவுதி அரேபியாவில் பணியாற்றும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் உலகின் மற்ற நாடுகளில் பணியாற்றுவதை காட்டிலும் அதிக சம்பளத்தை பெறுகிறார்கள். தனிப்பட்ட முறையில் வரி செலுத்துவது, செலவுகள் உள்ளிட்டவற்றை பார்க்கும்போது சவுதி அரேபியா வெளிநாட்டு பணியாளர்களுக்கு உகந்ததாக இருக்கிறது.
ஆனால், இதற்கு அப்படியே மாற்றமாக பிரிட்டனை கூறலாம். அங்கு வரிகள் காரணமாக அதிகமான செலவு பணியாளர்களுக்கு ஏற்படுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் பணியாளர்களுக்கு ஏற்படும் செலவு மிக மிக குறைவு என்று இசிஏ ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பணியாளர்களுக்கு அதிக செலவை ஏற்படுத்தும் நகரங்களில் சிங்கப்பூர் 16 ஆவது இடத்தில் உள்ளது.