உக்ரைன் போரில் போர் குற்றம் செய்தமைக்காக ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக கைது வாரண்டை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடந்த மார்ச்சில் பிறப்பித்தது.
.
1/ 9 தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பின் 15வது உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பங்கேற்கமாட்டார் என தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா தெரிவித்துள்ளார். சர்வதேச நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டு கைது வாரண்ட்டுக்கு அஞ்சியே விளாதிமிர் புதின் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.
.
2/ 9 பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் கூட்டமைப்பே BRICS என அழைக்கப்படுகிறது. 2009ம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் இந்த கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெறுகிரது. தென் ஆப்பிரிக்கா இணைவதற்கு முன்னதாக 2009 மற்றும் 2010ம் ஆண்டுகளில் 4 நாடுகள் கொண்ட கூட்டமைப்பாக இது இருந்தது.
.
3/ 9 கொரோனா பரவலால் வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் நடத்தப்பட்டு வந்த இந்த பிரிக்ஸ் மாநாடு தற்போது 15வது முறையாக தென் ஆப்பிரிக்காவில் நடைபெற இருக்கிறது. கொரோனாவுக்கு பிறகு இந்தியா, சீனா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் நேரடியாக இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
.
4/ 9 ரஷ்யா, உக்ரைனுக்கு எதிராக போர் தொடுத்த நிலையில், போர் குற்றங்களுக்காக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) கைது வாரண்டை பிறப்பித்துள்ளது.
.
5/ 9 இந்த ஐசிசி அமைப்பில் தென் ஆப்பிரிக்காவும் அங்கம் வகித்து வரும் நிலையில் அதன் மண்ணில் நுழையும் போது புதினை கைது செய்ய வேண்டும் என்ற நிலை தென் ஆப்பிரிக்காவுக்கு ஏற்பட்டது. இருப்பினும் அந்த நடவடிக்கையை தென் ஆப்பிரிக்கா மேற்கொள்ளுமா என்ற சந்தேகம் எழுந்தது.
.
6/ 9 இதனிடையே பிரிக்ஸ் மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்க மாட்டார் என தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா தெரிவித்துள்ளார். புதினுக்கு பதிலாக ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லெவ்ராவ் பங்கேற்பார் என கூறப்பட்டுள்ளது.
இதனிடையே பிரிக்ஸ் மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்க மாட்டார் என தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா தெரிவித்துள்ளார். புதினுக்கு பதிலாக ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லெவ்ராவ் பங்கேற்பார் என கூறப்பட்டுள்ளது.
7/ 9 தென் ஆப்பிரிக்காவில் புதினை கைது செய்ய முடியுமா?,[object Object],உக்ரைன் போரில் போர் குற்றம் செய்தமைக்காக ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக கைது வாரண்டை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடந்த மார்ச்சில் பிறப்பித்தது. இதன் மூலம் ரஷ்யாவின் மண்ணைவிட்டு புதின் வெளியே வந்தால் அவரை கைது செய்ய முடியும். இந்த நீதிமன்றத்துக்கு உட்பட்டது தென் ஆப்பிரிக்கா.
தென் ஆப்பிரிக்காவில் புதினை கைது செய்ய முடியுமா?
..
8/ 9 .
தென் ஆப்பிரிக்காவின் பிரதான எதிர்கட்சியான ஜனநாயகக் கூட்டணியும் புதின் தென் ஆப்பிரிக்காவினுள் நுழைந்தால் அவரை கைது செய்ய வேண்டும் என அந்நாட்டின் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.
9/ 9 இருப்பினும் கடந்த 2015ம் ஆண்டு ஆப்பிரிக்க உச்சி மாநாட்டின் போது, சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று சூடான் அதிபர் ஓமர் அல் பஷீரை கைது செய்ய தென் ஆப்பிரிக்கா மறுத்தது. இது சர்வதேச அளவில் சர்ச்சையையும் ஏற்படுத்தியது நினைவுகூறத்தக்கது..
இருப்பினும் கடந்த 2015ம் ஆண்டு ஆப்பிரிக்க உச்சி மாநாட்டின் போது, சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று சூடான் அதிபர் ஓமர் அல் பஷீரை கைது செய்ய தென் ஆப்பிரிக்கா மறுத்தது. இது சர்வதேச அளவில் சர்ச்சையையும் ஏற்படுத்தியது நினைவுகூறத்தக்கது..