வேற்றுகிரக ஏவுகணை பாகமா? கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட மர்ம பொருள்.. விசாரணை தீவிரம்!
20 Jul,2023
,
மேற்கு ஆஸ்திரேலியாவின் ஜூரியன் விரிகுடாவிற்கு அருகில் உள்ள கடற்கரையில் மர்மமான பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பொருள் என்னவாகும் இருக்கும்? எப்படி வந்தது என்று அனைவரும் அதிர்ச்சியடைந்த நிலையில், இந்த சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது.
ஒரு வேலை இது இஸ்ரோவின் சந்திரயான்-3 ராக்கெட்டின் ஒரு பாகமாகா இருக்குமோ என்று கூட பலரும் ஊகித்து வருகின்றனர். இந்த மர்மமான பொருள் விவகாரத்தை ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் தற்போது தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. அதுமட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள பல்வேறு அமைப்புகளின் உதவியையும் நாடியுள்ளது.
.
திங்கட்கிழமை, ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் தந்து அதிகாரப்பூர்வ ட்விட்டரில் பக்கத்தில் சேதமடைந்த பெரிய பொருள் ஒன்றின்புகைப்படத்தை பகிர்ந்து அதில், "மேற்கு ஆஸ்திரேலியாவின் ஜூரியன் பே கடற்கரையில் கிடந்த இந்த பொருளை நாங்கள் ஆராய்ச்சி செய்து வருகிறோம்" என்று பதிவிட்டிருந்தனர், இந்த பொருள் வேற்றுகிரக விண்வெளி ஏவுகணையின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
இந்தநிலையில், இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இது தொடர்பாக சமூகவலைத்த பக்கங்களில் பல்வேறு எழுப்பிவருகின்றனர், அனால் இப்போது வரை அந்த பொருளை பற்றிய சரியான பதில் கிடைக்கவில்லை.