நேட்டோவில் இணைவதற்கு உக்ரைன் தயாராக இல்லை - பைடன் அறிவிப்பு
10 Jul,2023
.
நேட்டோவில் உறுப்பினராக இணைவதற்கு உக்ரைன் இன்னும் தயாராக இல்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கி ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் வேளையில், உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கு தயாராக வில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இது குறித்து பைடன் கூறும்போது, போர் நடந்துகொண்டிருக்கிற போது உக்ரைனை நேட்டோவிற்குள் இணைப்பது குறித்து, உறுப்பினர்கள் இடையே ஆதரவு கருத்து வரும் என்று நான் நினைக்கவில்லை என பைடன் தெரிவித்துள்ளார்.
மேலும் உக்ரைன் இன்னும் நேட்டோவில் உறுப்பினராக இணைவதற்கு தயாராக இல்லை என்றும் கருதுவதாக பைடன் கூறினார். இருப்பினும் உக்ரைனுக்கு ஆதரவாக, நேட்டோவின் உறுப்பினரான துருக்கிய ஜனாதிபதி நேட்டோ உறுப்புரிமையைப் பெற உக்ரைன் தகுதியானது என்று கூறியுள்ளார்.