பிரான்ஸ் கலவரம்... இஸ்லாமிய அகதிகளுக்கு இடம் இல்லை
07 Jul,2023
.
பிரான்ஸ் நாட்டில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் வாலிபர் கொல்லப்பட்டதை அடுத்து ஏற்பட்ட கலவரம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தணிந்து வருகிறது. தலைநகர் பாரிஸ் உட்பட அனைத்து முக்கிய நகரங்களிலும் கடந்த 12 மணி நேரத்தில் எந்தவித அசம்பாவித சம்பவமும் இல்லை என கூறப்படுகிறது. கலவரத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் அரபு மற்றும் ஆப்பிரிக்க அகதிகள் என்று கூறப்படுகிறது. அவர்களில் பெரும்பாலோர் இப்போது பிரான்சின் குடிமக்களாக மாறிவிட்டனர். பிரான்ஸில் நடந்த கலவரம் மீண்டும் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்டதியுள்ளது . இதற்கிடையில், போலந்து எம்பி ஒருவரின் பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது, அதில் அவர் தனது நாட்டில் முஸ்லீம் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க மறுக்கப்படுகிறது என கூறுகிறார். இதன் காரணமாக போலந்தில் ஒரு பயங்கரவாத தாக்குதல் கூட நடைபெறவில்லை என்கிறார். இருப்பினும், பயங்கரவாத தாக்குதல் நடைபெறவில்லை என்ற இந்த கூற்று தவறானது என்றும் கூறப்பட்டு வருகிறது.
போலந்தின் ஆளும் பழமைவாத மற்றும் தேசியவாத சட்டம் மற்றும் நீதிக்கட்சியின் நாடாளுமன்ற உறூப்பினரான டொமினிக் டார்செவ்ஸ்கியின் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோ 2018 இல் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த காணொளியில், எத்தனை அகதிகளுக்கு போலந்து அடைக்கலம் கொடுத்துள்ளது என்று எம்.பி டார்சியுஸ்கியிடம் செய்தி தொகுப்பாளர் கேட்டபோது. அதற்கு அவர், முஸ்லிம்களின் சட்டவிரோதக் குடியேற்றம் பற்றி என்னிடம் கேட்டால், போலந்திற்குள் ஒரு இஸ்லாமியர்களை கூட அனுமதிக்க மாட்டோம் என்று பதிலளித்தார். இரண்டு மில்லியன் உக்ரேனியர்களை நாட்டிற்குள் நுழைய அனுமதித்துள்ளோம். ஆனால் ஒரு இஸ்லாமியரை கூட நுழைய அனுமதிக்க அளிக்கவில்லை. இதனை எமது மக்களுக்கு உறுதியளித்திருந்தோம். எங்கள் அரசிடம் மக்கள் இதை தான் எதிர்பார்க்கிறார்கள். இதனால் போலந்து பாதுகாப்பாக உள்ளது. இங்கு தீவிரவாத தாக்குதல் எதுவும் நடக்கவில்லை. நீங்கள் எப்படி வேண்டுமானாலும் என்னை அழைக்கலாம். ஆனால் நான் என் குடும்பம் மற்றும் எனது நாட்டைப் பற்றி அக்கறை கொண்டுள்ள நபராக இருக்கிறேன் என்றார். பிரான்ஸ் கலவரம் உலகம் முழுவதும் பேசப்படும் நிலையில், இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
போலந்தில் உண்மையில் தீவிரவாத தாக்குதல் நடக்கவில்லையா
போலந்தின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளால் பயங்கரவாதத் தாக்குதல்கள் எதுவும் நடைபெறவில்லை என்று சமூக ஊடகங்களில் கூறப்பட்டு வருகிறது. இது தொடர்பான வீடியோவும் பகிரப்பட்டு வருகிறது. இருப்பினும், அசோசியேட்டட் பிரஸ் (AP) இந்த கூற்றை மறுத்துள்ளது. சமூக ஊடகங்களில் பகிரப்படும் வரைபடம் உலகளாவிய பயங்கரவாத தரவுத்தளத்தைப் பயன்படுத்தி மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தால் உருவாக்கப்பட்டது என்று AP தெரிவித்துள்ளது. இந்த வரைபடத்தில் 2012 முதல் 2015 வரையிலான பயங்கரவாத தாக்குதல்கள் மட்டுமே உள்ளன. இந்த தரவுத்தளத்தில் அந்த காலகட்டத்தில் போலந்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் பற்றிய பதிவுகள் இல்லை. இருப்பினும், 2020 வரை போலந்தில் 42 பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன என தரவுகள் தெரிவிக்கின்றன என அசோசியேட்டட் பிரஸ் தெரித்துள்ளது .