ஈரானில் வல்லுறவுக் குற்றவாளிகள் மூவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
04 Jul,2023
ஈரானில் பாலியல் வல்லுறவு வழக்குகளில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 3 ஆண்களுக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவர்கள் போலியான பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிலையத்தை நடத்தி, பெண்களை அங்கு வரச்செய்து, பின்னர் அவர்களை வல்லுறவுக்குட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
மேற்படி 3 ஆண்களும் 12 வழக்குகளில் குற்றவாளிகள் என 2021 ஆம் ஆண்டில் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
மருத்துவ உதவியாளர்களான ஒருவர், போலி விளம்பரங்கள் மூலம் 7 பெண்களை மேற்படி போலி சிகிச்சை நிலையத்துக்கு வரவழைத்து, அவர்களுக்கு மயக்க மருந்து செலுத்தி, பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாக குற்றம்சுமத்தப்பட்டிருந்தது.
தாதிகளான ஏனைய இரு ஆண்களுக்கு எதிராக பாலியல் வல்லுறவு, மருந்து திருட்டு முதலான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.