தக்க பதிலடி உண்டு.மஸ்கோ மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதற்கு புதின் கண்டனம்!
31 May,2023
கடந்த சில நாள்களுக்கு முன்பு ரஷ்யா தனது அணு ஆயுதங்களை அண்டை நாடான பெலாரசுக்கு அனுப்பி வைத்தது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உக்ரைன் நடத்திய வான்வழித் தாக்குதல் ஒரு தீவிரவாத செயல் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் இடையே ஓராண்டுக்கு மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், இந்த போரானது அண்டை நாடுகள் மத்தியிலும் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் நோட்டோ நாடுகள் செயல்பட்டு வருகின்றன. உக்ரைனுக்கு தேவையான நிதி மற்றும் ஆயுத உதவிகளை அவை வழங்கி வருகின்றன.
இந்நிலையில், உக்ரைனில் ரஷ்ய ஆக்கிரமிப்புக்குப் பிறகு முதல் முறையாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உக்ரைன் படையினர் நேற்று காலையில் டிரோன் தாக்குதல் நடத்தினர். இதில், மாஸ்கோ நகரில் உள்ள பல கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும், 2 பேர் காயமடைந்ததாகவும் நகர மேயர் குற்றம்சாட்டினார். அதைத் தொடர்ந்து, 8 டிரோன்களை ரஷ்யப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.
மாஸ்கோ மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் புதின், இந்த தாக்குதல் ஒரு தீவிரவாத செயல் என்று குற்றம்சாட்டியுள்ளார். மாஸ்கோ நகரில் தாக்குதல் நடத்தியதன் மூலம், ரஷ்யாவை தூண்டிவிட முயற்சிகள் நடப்பதாகவும் புதின் தெரிவித்தார். மேலும், இந்த தாக்குதலுக்கு ரஷ்யா தக்க பதிலடி தரும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த போரில் ரஷ்ய படைகளுக்கு ஆதாரவாக பெலாரஸ் போன்ற அண்டை செயல்படுகின்றன. பெலாரஸ் மற்றும் ரஷ்யா இடையே சில வாரங்களுக்கு முன் அணு ஆயுத ஒப்பந்தங்கள் மேற்கொண்டன. ரஷ்யாவும் தனது அணு ஆயுதங்களை பெலாரசுக்கு அனுப்பி வைத்தது.
மேலும், ரஷ்யாவுடன் இணைந்து செயல்பட பெலாரஸ் ராணுவமும் பயற்சி மேற்கொண்டு தயார் நிலையில் உள்ளது. இந்த போர் முடிவுக்கு வர வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை வைத்து வரும் நிலையில், இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி தொடர்ந்து மல்லுக்கட்டி வருகின்றன.