அமெரிக்காவுடன் உறவாடும் தைவான்.. கடுகடுக்கும் சீனா
08 Apr,2023
தைவான் அதிபர் அமெரிக்கா சென்றதையடுத்து, சீனா தைவானைச் சுற்றிப் போர்க் கப்பலை நிறுத்தி வைத்துள்ளது.
தைவான் அதிபர் மற்றும் அமெரிக்கச் சபாநாயகர் இடையேயான சந்திப்புக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தைவான் எல்லையில் சீன ராணுவம் பயிற்சியைத் தொடங்கியுள்ளது.சீனா தைவானைத் தனது நாட்டின் ஒரு பகுதி எனக் கூறி வருகிறது. இந்நிலையில், சீனாவின் மிரட்டலையும் பொருட்படுத்தாமல் தைவான் அதிபர் சாய் இங் வென் அமெரிக்காவிற்குச் சென்றுள்ளார்.
கலிபோர்னியாவில் அவரை அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை வரவேற்றார்.அதன்பின் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகத் தைவானைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குச் சீனா போர்க் கப்பல்களை அனுப்பியுள்ளது.
தைவானுக்குக் கிழக்கே 200 மைல் தொலைவில் கடலில் விமானம் தாங்கி போர்க்கப்பலைச் சீனா நிலை நிறுத்தியுள்ளது. அங்கு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இதேபோன்று தைவானுக்குக் கிழக்கே 400 மைல் தொலைவில் அமெரிக்காவும் போர்க் கப்பலை நிறுத்தியுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.