புதிய அணு ஆயுதங்களை அறிமுகப்படுத்திய வடகொரியா
30 Mar,2023
ஏவுகணைகளில் வைத்து செலுத்தக்கூடிய ஹவாசன்-31எஸ் என்று அழைக்கப்படும் சிறிய ரக அணு குண்டுகள் உள்ளிட்ட
ஆயுதங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அமெரிக்காவைத் தாக்கும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளில் பொருத்தும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டிருக்காலம் என்று அணு ஆயுத நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பியாங்யாங்: அமெரிக்க-தென்கொரிய படைகளின் கூட்டுப்போர் பயிற்சி மற்றும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியா நடத்தி வரும் தொடர் ஏவுகணை சோதனைகளால் கொரியா தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த பரபரப்புக்கு மத்தியில் வடகொரியா புதிய அணு ஆயுதங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் புதிய அணு ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்தபோது, ஏவுகணைகளில் வைத்து செலுத்தக்கூடிய ஹவாசன்-31எஸ் என்று அழைக்கப்படும் சிறிய ரக அணு குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த அணு குண்டுகள் அளவில் சிறியதாக இருந்தாலும் அமெரிக்காவைத் தாக்கும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளில் பொருத்தும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டிருக்காலம் என்று அணு ஆயுத நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.