ரஷ்யா அதிபர் புதினுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் கைது வாரண்
18 Mar,2023
ரஷ்யா அதிபர் புதினுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் கைது வாரண்ட்டை பிறப்பித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெதர்லாந்து நாட்டில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உக்ரைனில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ரஷ்யாவுக்கு சட்டவிரோதமாக குழந்தைகள் மற்றும் மக்களை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த போர் குற்றத்திற்காக ரஷ்ய அதிபர் புதின் மற்றும் ரஷ்யாவின் குழந்தைகள் உரிமைகளுக்கான ஆணையர் ஆகியோருக்கு கைது வாரண்டு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போர் குற்றங்களில் ஈடுபட்டதாக ரஷ்ய அதிபர் புதினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து உள்ள தகவல் உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.