சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க பிரான்ஸ்க்கு 500 மில்லியன் பவுண்ஸ்களை வழங்குகின்றது பிரித்தானியா !
12 Mar,2023
சிறிய படகுகளின் ஊடாக நாட்டுக்கு சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுக்க பிரித்தானிய அரசாங்கம் பிரான்ஸ்க்கு 500 மில்லியன் பவுண்ஸ்களை வழங்கவுள்ளது.
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கு இடையில் பாரிஸில் நடைபெற்ற மாநாட்டில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்தோர் எண்னிக்கை கட்டுப்படுத்தும் வகையில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அமுலில் இருக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
பிரான்ஸ் கடற்பரப்பில் இடம்பெறும் ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்க பிரித்தானியாவினால் வழங்கப்படும் குறித்த நிதி பயன்படும் என இரு தலைவர்களும் அறிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு 3,000 க்கும் மேற்பட்ட மக்கள் ஏற்கனவே ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொண்டுள்ள அதேவேளை 2022 இல் கிட்டத்தட்ட 46,000 பேர் குடியேறியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.