உக்ரைன், ரஷ்ய யுத்த நிறுத்தம் - நிறைவேற்றப்பட்ட ஐநாவின் தீர்மானம் - வாக்களிப்பு முடிவு!
24 Feb,2023
உக்ரைனில் உள்ள ரஷ்ய படைகள் வெளியேற வேண்டும் என ஐக்கிய நடுகள் சபையால் முன்வைக்கப்பட்ட பிரேரணை பொதுச் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
சீனா, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகள் குறித்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
எனினும், ஐநாவின் குறித்த சிறப்புத் தீர்மானம் 141 நாடுகளின் ஆதரவுடன், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உக்ரைனில் உள்ள ரஷ்ய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் எனவும், உடனடியாக யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் கோரி ஐக்கிய நாடுகள் சபையால் சிறப்புத்தீர்மானம் முன்வைக்கப்பட்டிருந்தது.
குறித்த தீர்மானத்திற்கு 141 நாடுகள் ஆதரவாகவும், 7 நாடுகள் எதிராகவும் வாக்களித்துள்ளநிலையில், சீனா, இந்தியா, இலங்கை, பாக்கிஸ்தான் உள்ளிட்ட 32 நாடுகள் குறித்த வாக்கெடுப்பினை புறக்கணித்திருந்தன.