உலகம் முழுவதும் 32 இடங்களில் உணரப்பட்ட நிலநடுக்கங்கள்!
17 Feb,2023
உலகம் முழுவதும் 32 இடங்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலநடுக்கங்களில், அதிகபட்சமாக 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பிலிப்பைன்ஸில் பதிவாகியுள்ளது.
அத்துடன், நியூசிலாந்து, அலாஸ்கா, கொலம்பியா, டோங்கா, பொலிவியா உள்ளிட்ட பல நாடுகளில் 5 ரிக்டருக்கு மேல் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளது.
மீண்டும் துருக்கியில் கடந்த 24 மணித்தியாலத்தில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கங்களினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரையில் பதிவாகவில்லை.