நான்காவது அடையாளம் தெரியாத பறக்கும் பொருளை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா!
13 Feb,2023
இந்த மாதம் நான்காவது ராணுவ நடவடிக்கையில், அடையாளம் தெரியாத மற்றொரு பறக்கும் பொருளை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் கனேடிய எல்லைக்கு அருகில் உள்ள ஹூரோன் ஏரிக்கு அருகில் அதை வீழ்த்துமாறு ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டார்.
இந்த பொருள் 20,000 அடி (6,100 மீ) உயரத்தில் பயணித்ததால் வணிக விமானப் போக்குவரத்தில் தலையிடக்கூடும் என்று பென்டகன் அறிக்கை தெரிவித்துள்ளது.
இது சனிக்கிழமையன்று மொன்டானாவில் உள்ள இராணுவ தளங்களுக்கு மேலே கண்டறியப்பட்டது.
இராணுவ அச்சுறுத்தலாக கருதப்படாத இந்த பொருள், பாதுகாப்பு அதிகாரிகளால் ஆளில்லா மற்றும் எண்கோண வடிவமாக விபரிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி 14:42 மணிக்கு எஃப்-16 போர் விமானத்திலிருந்து ஏவப்பட்ட ஏவுகணையால் இந்த பொருள் வீழ்த்தப்பட்டது.
இச்சம்பவம் இந்த மாதம் வட அமெரிக்காவில் சுட்டு வீழ்த்தப்பட்ட உயரமான பொருட்களைப் பற்றி மேலும் கேள்விகளை எழுப்பியது.
சந்தேகத்திற்கிடமான சீன உளவு பலூன், கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி தென் கரோலினா கடற்கரையில் அமெரிக்கக் கண்டத்தில் பல நாட்கள் வட்டமிட்ட பின்னர் வீழ்த்தப்பட்டது. இது சீனாவில் தோன்றியதாகவும், உணர்திறன் வாய்ந்த இடங்களைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், இந்த பொருள் உளவு பார்க்க பயன்படுத்தப்பட்டதை மறுத்த சீனா, இது வானிலை கண்காணிப்பு சாதனம் என்றும், தவறாக வீசப்பட்டதாகவும் கூறியது.
இந்த சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், முதல் பொருள் பற்றி அறிந்துக்கொள்ள சீனாவுடன் அமெரிக்கா தொடர்புக் கொண்டதாக அதிகாரியொருவர் தெரிவித்தார். எனினும் இதன்போது என்ன விடயம் கலந்துரையாட அல்லது விவாதிக்கப்பட்டது என்பது குறித்த அவர் கருத்து கூறவில்லை