பாக்முட் அருகே உள்ள கிராமத்தை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு !
02 Feb,2023
உக்ரேனிய நகரமான பாக்முட் அருகே உள்ள கிராமத்தை வான்வழி படையினரின் உதவியோடு கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள நகரத்தை சுற்றி வளைக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
சுமார் 75 ஆயிரம் சனத்தொகையை கொண்ட பக்முட் நகரை கைப்பற்றுவது ரஷ்யாவின் முதல் பெரிய போர்க்கள சாதனையாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேநேரம் பக்முட் மீது ரஷ்யா நடத்திய பீரங்கி தாக்குதலில் சிறுவன் உட்பட இரண்டு பொது மக்கள் கொல்லப்பட்டதாக அப்பிராந்திய ஆளுநர் தெரிவித்திருந்தார்.
இந்த மாத தொடக்கத்தில், சுமார் 400 பேர் இருந்த உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள கிளிஷ்சிவ்கா என்ற கிராமத்தைக் கைப்பற்றியதாகவும் ரஷ்யா அறிவித்திருந்தது.
இதேவேளை வுஹ்லேடரின் பகுதியையும் கைப்பற்றியதாக இந்த வாரம் ரஷ்யா அறிவித்த போதும் அந்தத் தாக்குதலை பெருமளவில் முறியடித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.