அமைச்சர் நாதிம் ஜகாவி பதவி நீக்கம்- பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அதிரடி
31 Jan,2023
நாதிம் ஜகாவி வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஈராக்கைப் பூர்வீகமாகக் கொண்ட நாதிம் நிதி அமைச்சராக பதவி வகித்துள்ளார். மேலும் படிக்க பிரிட்டன்: பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும், அமைச்சராகவும் பணியாற்றிய நாதிம் ஜகாவி வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஈராக்கைப் பூர்வீகமாகக் கொண்ட நாதிம் நிதி அமைச்சராக பதவி வகித்து வந்தார். கடந்த ஆண்டு அவர் வருவாய் மற்றும் சுங்கத்துறைக்கு அபராதம் கட்ட ஒப்புக் கொண்டதையடுத்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் நாதிம் மீது வைக்கப்பட்டன. பிரதமரின் தனிப்பட்ட ஆலோசகர் இது குறித்து விசாரணை நடத்திய நிலையில் குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து நாதிம் ஜஹாவிவை பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அரசு பதவியில் இருந்து நீக்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.