நியூசிலாந்து விமானம் ஆஸ்திரேலியாவில் அவசரமாக தரையிறக்கம் உயிர் தப்பிய 145 பயணிகள்.!
19 Jan,2023
நடுவானில் என்ஜின் செயலிழந்ததால் நியூசிலாந்து விமானம் ஆஸ்திரேலியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. சிட்னி,
நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவில் அமைந்துள்ள ஆக்லாந்து நகரில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு நேற்று மதியம் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. குவாண்டாஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் 145 பயணிகள் பயணம் செய்தனர். இந்த விமானம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குள் நுழைந்து நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தின் 2 என்ஜின்களில் ஒன்று திடீரென செயலிழந்தது. இதனால் விமானத்தின் வேகம் குறைந்து, குறைவான உயரத்தில் பறந்தது.
இதனையடுத்து விமானிகள் விமானம் ஆபத்தில் இருப்பதாக சிட்னி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் விமானிகளை தொடர்பு கொண்டு விமானத்தை அவசரமாக தரையிறக்க கேட்டுக் கொண்டனர். மேலும் விமான நிலைய ஓடுபாதையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அங்கு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்சுகள் தயார்நிலையில் வைக்கப்பட்டன. இதையடுத்து, விமானிகள் விமானத்தை அவசரமாக தரையிறக்கினர்.
அதனை தொடர்ந்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தின் என்ஜின் செயலிழந்ததை விமானிகள் உடனடியாக கண்டறிந்து, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து விமானத்தை அவசரமாக தரையிறக்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்து. பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பினர்.
நியூசிலாந்து பிரதமராக ஐந்தரை ஆண்டுகள் பதவியில் இருந்த ஜசிந்தா ஆர்டர்ன் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
வெல்லிங்டன், நியூசிலாந்து பிரதமராக பதவி வகித்து வருபவர் ஜசிந்தா ஆர்டெர்ன் . தாராளவாத தொழிலாளர் கட்சி ( liberal Labour Party)யை சேர்ந்த ஜெசிந்தா ஆர்டன் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்து நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருகிறார். சமீபத்தில் அங்கு நடைபெற்ற தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியை விட பின் தங்கியது. தேர்தலில் ஜசிந்தா ஆர்டெர்னின் கட்சி பின்னடைவை சந்தித்துள்ள சூழலில் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக
ஜசிந்தா ஆர்டெர்ன் அறிவித்துள்ளார். வரும் பிப்ரவரி 7 ஆம் தேதியுடன் தனது பதவியில் இருந்து விலகுவதாக ஜசிந்தா ஆர்டெர்ன் அறிவித்து இருக்கிறார். தனது பதவி விலகல் அறிவிப்பை வெளியிட்ட பிறகு ஜசிந்தா ஆர்டர்ன் கூறுகையில், " இது கடினமான பணி என்பதால் நான் விலகி செல்லவில்லை. அப்படி இருந்து இருந்தால் வெறும் இரண்டே மாதங்களில் பிரதமர் பதவியில் இருந்து விலகி சென்று இருப்பேன். நாட்டை வழிநடத்துவதற்கு சிறந்த நபர் இருப்பதை அறிந்ததால் நான் இந்த பொறுப்பில் இருந்து விலகுகிறேன்" என்றார்.