அமெரிக்காவுக்கு புடின் பகிரங்க எச்சரிக்கை
10 Jan,2023
உக்ரைனுக்கு உதவும் நாடுகள் எதுவாக இருந்தாலும் அதை ரஷ்யா பரம எதிரியாக பார்க்கும், எதிரிகள் மீது அணு ஆயுதங்களை பிரயோகிக்க ரஷ்யா என்றும் தயங்காது என கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஷ்ய அதிபர் புடின் வெளிப்படையாக எச்சரித்திருந்தார்.
பெயரை குறிப்பிடாமல் கூறினாலும் அது அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கையாகவே பார்க்ப்பட்டது.
உலகிலேயே மிக ஆபத்தான போர்க்கப்பலாக அறியப்படும் ரஷ்யாவின் 'கர்ஷ்கோவ்', அட்லாண்டிக் பெருங்கடலில் அமெரிக்காவுக்கு மிக அருகே நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது.
இதுவரை அமெரிக்காவை வாய்மொழியில் மட்டும் எச்சரித்து வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், தற்போது செயலில் இறங்கிவிட்டதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான எச்சரிக்கைகளுக்கு மத்தியில் அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கும் ஆயுத உதவிகளை நிறுத்தவில்லை.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் எச்சரிக்கையை கண்டுகொள்ளாமல் இருந்த அமெரிக்கா தற்போது பெரும் அச்சத்தில் உள்ளது.
ஏனெனில், ரஷ்யாவின் அணு ஆயுதம் தாங்கிய போர்க்கப்பலை அட்லாண்டிக் கடலில் நிறுத்தியுள்ளார் புடின். அமெரிக்காவின் 14 மாகாணங்களை ஒட்டிய கடற்பகுதியில் இரவும் பகலுமாக சுற்றி வருகிறது ரஷ்யாவின் 'கர்ஷ்கோவ்' போர்க்கப்பல்.
உலகிலேயே மிகவும் ஆபத்தான போர்க்கப்பலாக 'கர்ஷ்கோவ்'. கப்பல் கருதப்படுகிறது. அமெரிக்கா சர்கோன் உட்பட அதிநவீன ஏவுகணைகள் கர்ஷ்கோவ் போர்க்கப்பலில் பொருத்தப்பட்டுள்ளது என்பதுதான் உலக நாடுகளின் அச்சத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
இவை அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டவை. சர்கோன் ஏவுகணை 1,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளை கூட துல்லியமாக தாக்கி அழிக்க முடியும்.
இது ஒலியைவிட 9 மடங்கு வேகத்தில் செல்லக்கூடியது. அதுமட்டுமல்லாமல், இந்த ஏவுகணையை ரேடாரில் கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என கூறப்படுகிறது.
எந்தவொரு ஏவுகணை தடுப்பு அமைப்பாலும் சர்கோன் ஏவுகணைகளை அழிக்க முடியாது என்பதும் இதன் கூடுதல் சிறப்பம்சம் ஆகும். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கூட இந்த ஏவுகணைக்கு இணையான ஏவுகணை இல்லை எனக் கூறப்படுகிறது.