உக்ரைன் போர் நிறுத்தத்தை நிராகரித்ததுஸ. உங்களது உல்லாசத்துக்காக போர்நிறுத்தம வேண்டாம்!
07 Jan,2023
உக்ரைன் மீது ரஷியா கடந்த 11 மாதங்களுக்கு மேல் போர் தொடுத்து வருகின்றது, அமெரிக்கா மற்றும் ஜரோப்பிய நாடுகளின் இராணுவ உதவிகளின் மூலமாக அதிகளவான இராணுவ பலத்தினை உடைய ரஷ்யாவினை எதிர்த்து தொடரந்தும் உக்ரைன் போரிட்டு வருகின்றது. இந்நிலையில் பல ஜி 07 நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளதுடன் இந்தியா போன்ற பல்வேறு நாடுகள் போரை முடிவுக்கு கொன்டு வருமாறு தொடர்ந்து ரஷ்யாவிடம் தெரிவித்து வருகின்றது.
இந்நிலையில் ரஷ்யா நேற்று திடிரென யுத்தத்தினை நிறுத்துவதாக அறிவித்தது, அதாவது தனது நாட்டு மக்கள் ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்துமஸ் பண்டிகையினை நாளை சிறப்பாக கொன்டாடும் முகமாக 36 மணித்தியாலய போர் நிறுத்தத்தினை அறிவித்தது. இதனை அதிரடியாக நிராகரித்த உக்ரைன் ஜனாதிபதி தங்களது நாட்டு மக்கள் உல்லாசம் அனுபவிப்பதற்காக போரை முடிவுக்கு கொன்டு வர முடியாது எனவும், அவ்வாறு நடைபெற வேண்டுமானால் உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமித்த பகுதிகளை விட்டு விலக வேண்டும் எனவும் இல்லாவிடில் பதிலடி தொடரும் எனவும் தெரிவித்தார்.