எண்ணெய் விநியோகம் இல்லை – ரஷ்யா அதிரடி அறிவிப்பு !
28 Dec,2022
மேற்கத்திய நாடுகள் ஒப்புக்கொண்ட விலை வரம்பிற்கு இணங்கும் நாடுகளுக்கு எண்ணெய் விற்கப் போவதில்லை என ரஷ்யா அறிவித்துள்ளது.
இம்மாதம் 5 ஆம் திகதி அமுலுக்கு வந்த மேற்கத்தேய நாடுகளின் குறித்த விலை வரம்புக்கு நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பதிலை ரஷ்யா வழங்கியுள்ளது.
ரஷ்யாவிடமிருந்து கடல்வழியாகப் பெறும் ஒரு பீப்பாய் எண்ணெய்க்கு 60 டொலர் என்றும் அதற்கு மேல் கட்டணம் செலுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அவுஸ்ரேலியா உள்ளிட்ட ஜி 7 இல் அங்கம் வகிக்கும் முக்கிய நாடுகள் ஒப்புக்கொண்டன.
இந்நிலையில் குறித்த வரம்பை கடைபிடிக்கும் நாடுகளுக்கு பெப்ரவரி முதல் ஐந்து மாதங்களுக்கு கச்சா எண்ணெய்களை வழங்க ரஷ்யா தடை விதித்துள்ளது.
அனைத்துலகச் சட்டத்திற்கு முரணாக நடந்துகொள்ளும் அமெரிக்கா, பிறநாடுகள், அனைத்துலக அமைப்புகள் ஆகியவற்றின் செயல்களுக்குத் தான் விதிக்கும் நேரடியான பதிலடி என விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதியின் இந்த அதிரடி அறிவிப்பு காரணமாக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.