ஸ்ரேலை எப்படி அழிப்போம் மாதிரி வீடியோ போட்டுக் காட்டிய ஈரான்
28 Dec,2022
ஈரானில் உள்ள நட்டனாஸ் என்ற அணு உலையை தாக்கி அழிக்க, பல காலமாக இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது. இது ஊர் அறிந்த விடையம். சமீபத்தில் கூட ஹக்கர்களை பாவித்து இந்த அணு உலையின் கம்பியூட்டரை இஸ்ரேல் ஹக் செய்து இருந்தது. இதனூடாக குளிரூட்டிகளை செயல் இழக்கச் செய்து. அதனூடாக அணு உலையை தகர்க்கும் திட்டம் தான் அது. ஆனால் அந்த ஹக்கிங்கை(ஊடறுப்பை) தாம் செய்யவில்லை என்று மறுத்தது இஸ்ரேல். இதனை அடுத்து..
ஒரு வேளை இஸ்ரேல் விமானங்கள் அத்துமீறி ஈராணுக்குள் நுளைந்து, நட்டனாஸ் என்ற அணு உலையை தாக்கினால். நாம் எப்படி பதிலடி கொடுப்போம் என்ற வீடியோ ஒன்றை, ஈரான் வெளியிட்டுள்ளது. அதில் தங்களிடம் உள்ள அதிநவீன குறுந்தூர ஏவுகணைகளை அவர்கள் காட்டியுள்ளதோடு. பெரும் சுரங்கம் ஒன்றில், அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதையும் முதல் தடவையாக காட்டியுள்ளார்கள். மேலும்ஸ
தமது நாடு மீது வந்து, குண்டு போட்டு விட்டுச் செல்லும் இஸ்ரேல் விமானம். தனது நாட்டில் தரை இறங்க தளம் இல்லாமல் போகும் என்றும். விமானம் இஸ்ரேல் செல்ல முன்னரே இறங்கு தளத்தை தமது ஏவுகணைகள் தாக்கி அழித்து விடும் என்று, ஈரான் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது